- Advertisement -
Home India ஆக்ஸிஜனை அகற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்; குழந்தைகளுக்கு நேர்ந்த அவலம்!!

ஆக்ஸிஜனை அகற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்; குழந்தைகளுக்கு நேர்ந்த அவலம்!!

- Advertisement -

“நான் அவரிடம் என்னால் பணம் செலுத்த முடியாது என்றுகூறி கெஞ்சினேன். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை” என்கிறார் குழந்தைகளின் தந்தை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களும் மக்களிடம் அலட்சியமாகவும் பணம் செலுத்த முடியாத நிலையில் தரக்குறைவாக நடத்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களை பணம் செலுத்தாத காரணத்துக்காக வாகனத்தில் இருந்து இறங்க வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இரண்டு சகோதரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்ததை அடுத்து அவர்களை மாநில மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குழந்தைகளின் தந்தை முடிவெடுத்து ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொல்கத்தா மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல சுமார் ரூபாய் 9,200 கேட்டதாகக் குழந்தைகளின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இரண்டு மருத்துவமனைக்கும் இடையிலான தொலைவு வெறும் ஆறு கி.மீதான் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தை பேசும்போது, “நான் அவரிடம் என்னால் பணம் செலுத்த முடியாது என்று கூறி கெஞ்சினேன். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக, என் இளைய மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்ஸிஜனை அகற்றி எனது மகன்களையும் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து வாக்குவாதங்களுக்குப் பிறகு ரூபாய் 2,000 கட்டணத்துடன் அழைத்துச் செல்ல சம்மதித்தார்.

ஐ.சி.ஹெச் மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால்தான் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக என் குழந்தைகளை அழைத்து செல்ல முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனா நோயாளிகளிடம் நடந்துகொண்ட விதம் தற்போது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. ‘ஸ்பார்க் எயார்’...

ஒருவர் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது!

ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க...

பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி…!!

இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

கொரோனாவினால் பலியானோர் 10 இலட்சம் பாதிப்புக்குள்ளானோர் தொகை மூன்று கோடி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here