HomeSrilankaநாடளாவிய ரீதியில் முழுமையான வாக்குப்பதிவு விபரம்!

நாடளாவிய ரீதியில் முழுமையான வாக்குப்பதிவு விபரம்!

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 60 வீதம் வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இம்முறை பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், 160 தேர்தல் தொகுதிகளில், 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து 85 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகள் மூலம் 196 பேரும், தேசியப் பட்டியல் மூலம் 29 பேருமாக, மொத்தமாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

22  தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சி சார்பாக  மூவாயிரத்து 652 வேட்பாளர்களும் சுயேட்சை குழு சார்பில் மூவாயிரத்து 800 வேட்பாளர்கள் உள்ளடங்கலாக 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 12 லட்சத்து 19 ஆயிரத்து 395 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 17 இலட்சத்து 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகக் காணப்படுகின்றனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில்  17 இலட்சத்து ஒன்பதாயிரத்து 209 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், மற்றும் 26 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 11 இலட்சத்து 29 ஆயிரத்து 100 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தில், 8 இலட்சத்து 67 ஆயிரத்து 709 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 70 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 6 இலட்சத்து 59 ஆயிரத்து 587 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 70 சதவீதமான வாக்குகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 192 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 76 சதவீதமான வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 569 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 72 சதவீதமான வாக்குகளும், பதிவாகியுள்ளன.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 9 இலட்சத்து 9 ஆயிரத்து 209 வாக்காளர்கள் பதிவாகியிருந்ததுடன், 65 சதவீதமான வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 717 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 75 சதவீதமான வாக்குகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 67 சதவீதமான வாக்குகளும், பதிவாகியுள்ளன.

அத்துடன், வன்னி மாவட்டத்தில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 024 வாக்காளர்கள் பதிவாகியிருந்த நிலையில், 74 சதவீதமான வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 73 சதவீதமான வாக்குகளும், பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேகாலை மாவட்டத்தில்  6 இலட்சத்து 84 ஆயிரத்து 189 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 70 வீத வாக்குகளும், இரத்தினபுரி மாவட்டத்தில்  8 இலட்சத்து 77 ஆயிரத்து 582 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 72 வீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தில்  6 இலட்சத்து 93 ஆயிரத்து 634 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 70 வீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 14 ஆயிரத்து 370 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 65 வீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 74 வீத வாக்குகளும், திகாமடுல்லை மாவட்டத்தில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 வாக்காளர்கள்  பதிவு செய்யப்பட்ட நிலையில், 73 வீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 76 வீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 109 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 72 வீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 17 இலட்சத்து 9 ஆயிரத்து 209 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 67 வீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 6 இலட்சத்து 68 ஆயிரத்து 166 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 65 வீத வாக்குகளும், குருணாகலை மாவட்டத்தில்  13 இலட்சத்து 48 ஆயிரத்து 787 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 65 வீத வாக்குகளும், பதிவாகியுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில்  17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 68 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -