- Advertisement -
Home International பெயிரூட் குண்டு வெடிப்பு; லெபனானுக்கு உதவி கரம் நீட்டும் உலகநாடுகள்!!

பெயிரூட் குண்டு வெடிப்பு; லெபனானுக்கு உதவி கரம் நீட்டும் உலகநாடுகள்!!

- Advertisement -

Beirut explosion: Thousands injured across Lebanese capital

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலக நாடுகள் முன்வந்துள்ளன.

அண்டை நாடான லெபனானுக்கு மருத்துவ உதவி வழங்கத் தயாராக இருப்பதாக சைப்ரஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை, பாரிய குண்டுவெடிப்பில் லெபனானுக்கு மருத்துவ உதவி அனுப்பவும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஈரானின் ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தனது நாட்டின் வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும் எங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபனான் மக்களுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. நாங்கள் உதவ அங்கு இருப்போம். இது ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது’ என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுவோரில் துருக்கியின் மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை (ஐ.எச்.எச்) உள்ளது. மேலும் அங்காரா ஒரு கள மருத்துவமனையை கட்டியெழுப்பவும் தேவைக்கேற்ப உதவவும் முன்வந்துள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிப்பில் காயமடைந்த 500 பேருக்கு சிகிச்சை அளிக்க பிரான்ஸ் இரண்டு இராணுவ விமானங்களை அனுப்பவுள்ளது.

இதில் தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களுடன் 15 டன் சுகாதார உபகரணங்கள் மற்றும் ஒரு நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்படுமென ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. மேலும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டை உலுக்கிய பாரிய வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தம் தெரிவித்தார்.

பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் இறந்தவர்களில் குறைந்தது இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் அடங்குவதாக லெபனானில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒரு அவுஸ்ரேலியர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினார்.

பேரழிவுகரமான பெய்ரூட் வெடிப்புக்கு லெபனான் அதிகாரிகள் கூறிய அம்மோனியம் நைட்ரேட், மணமாக இல்லாத படிகப் பொருளாகும். இது பொதுவாக உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல தசாப்தங்களாக ஏராளமான தொழில்துறை வெடிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

எரிபொருள் எண்ணெய்களுடன் இணைக்கும்போது, அம்மோனியம் நைட்ரேட் கட்டுமானத் தொழிலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த வெடிபொருளை உருவாக்குகிறது. ஆனால், இதனை வெடிபொருட்களுக்காக தலிபான் போன்ற ஆயுதக் குழுக்கள் பயன்படுத்துகின்றது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here