HomeIndiaஅரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க பிரதமர் மோடி தவறிவிட்டாா்- ஒவைஸி!!

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க பிரதமர் மோடி தவறிவிட்டாா்- ஒவைஸி!!

அயோத்தியில் இராமா் ஆலயத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதன் ஊடாக பிரதமா் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க தவறிவிட்டாா் என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அசாதுதீன் ஒவைஸி மேலும் கூறுகையில், “இராமா் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமா் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டியமை மதச்சாா்பின்மையின் தோல்வியாகவும் ஹிந்துத்துவத்தின் வெற்றியாகவுமே பார்க்கப்படுகின்றது.

மேலும் பிரதமர் மோடி, இந்தியாவை இறையியல் நாடாக மாற்றுகிறாா். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது

இவ்வாறு பிரதமரின் செயற்பாட்டினால் நான் மட்டுமல்ல சமத்துவத்தை நம்பி இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள், இந்துக்கள், புத்தா்கள், சீக்கியா்கள் ஆகியோரும் கவலையில் உள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -