HomeSpiritualகரும வினைகளை களைவோம்; பாகம்-02

கரும வினைகளை களைவோம்; பாகம்-02

முன் ஜென்ம தொடர்புகள்…..
முன் ஜென்ம தொடர்புகள்தான் மனிதனின் பல பிறவிகளுக்கு வித்திடுகிறது என்றும் அந்த தொடர்பின் அடிப்படையிலேயே அவரவர் வாழ்க்கையும் அமைகிறதென்று பல மகான்கள், ஞானிகள், சித்தர்கள் தமது ஆழ்நிலைத் தியானத்தின் மூலம் கண்டுணர்ந்து பிரபஞ்சமும் மனித வாழ்வு பற்றியும் எண்ணிலடங்காத விளக்கங்களையும் தெளிவுகளையும் அருளியுள்ளார்கள்; அது மாத்திரமல்ல காலத்துக்கு காலம் உலகில் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் போது தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் நல்லவர்களை காப்பாற்றுவதற்குமாக பிரபஞ்சத்தை படைத்த இறைவனே மனித உருவம் தாங்கி வருகிறார் அல்லது தனது தூதர்களை அனுப்பி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறார் என்பது வரலாறு.
DSC 0375
முன் ஜென்மம் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? இதனை வெல்ல வழியென்ன? என்று கேட்கலாம் இந்த கேள்விகளுக்கான பதில்களை பல உதாரணங்கள் மூலம் கீழே தருகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு தாய்க்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள் உருவ அமைப்பில் இரு குழந்தைகளும் ஒரே வடிவத்தில் நமக்கு தென்பட்டாலும் ஒரு குழந்தை நிறத்தில் கறுப்பாகவும் மறு குழந்தை வெள்ளையாகவும் இருக்கிறது அதே போல் ஒரு குழந்தை நாம் கேட்டதும் தர வருகிறது மறு குழந்தை அதை தடுத்து நிறுத்துகிறது அல்லது தர மறுக்கிறது; ஒரு குழந்தை நம்மை பார்த்து சிரிக்கிறது மறு குழந்தை அழுகிறது இந்த செயல்கள் அனைத்தையும் எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே அக் குழந்தைகள் தாமாகவே செய்கின்றன அப்படியாயின் அவர்களின் ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறான செயல்களின் காரணம் என்ன? அவர்கள் உருவத்தால் ஒன்று பட்டிருந்தாலும் உள்ளத்தால் வேறுபட்டு காணப்படுகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!
இவ்வாறு உள்ளத்தின் வேறுபாடுகளை வைத்துத்தான் பூர்வ ஜென்ம தொடர்பு என்கிறார்கள்.
இதனை மேலும் ஆராய்ந்து பார்த்தால் இருவரும் வேறு வேறு சூழலில் முற் பிறவியில் பிறந்து வாழ்ந்திருக்கிறார்கள் ஒருவர் பிறருக்கு கொடுத்து வாழ்ந்திருக்கிறார் மற்றவர் கொடுக்காமல் வாழ்ந்திருக்கிறார் ஒருவரது உயிர் கொடுத்து வாழும் பக்கம் சார்ந்து வாழ்ந்திருக்கிறது மற்றவர் உயிர் கொடுக்காத பக்கம் சார்ந்து வாழ்ந்திருக்கிறது அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப உலகில் வாழ்வினை வாழ்ந்து முடிக்கிறார்கள் பின்னர் அதே ஆன்மா சித்தத்தில் பதிந்துள்ள பதிவுகளின் அடிப்படையில் வேறு உடல் எடுக்கிறது முன்னர் செய்த செயலின் விளைவாக இப் பிறவியில் அதன் தன்மை, குணம், பண்புகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே தானாகவே ஆன்மாவின் சித்த மனத்தில் பதிந்துள்ள முன்னைய செயல்கள் தொடர்கிறது; எங்கு பிறப்பு அமையுமோ அதே போல்தான் ஆன்மாவும் அமையும்.
உதாரணத்திற்கு திருஞான சம்பந்தருக்கு 03 வயதில் ஞானம் கிடைத்தது ஆனால் திருநாவுக்கரசருக்கு 70 வயதில்தான் ஞானம் கிடைத்தது; திருஞான சம்பந்தர் தனது முந்தைய பிறவியில் ஆன்மீக பக்கம் அதிகம் சார்ந்து வாழ்ந்து ஞானம் கிடைக்க மூன்று வருடங்கள் உள்ள நிலையில் ஆன்மீகப் பக்கம் இருந்து விலகியதால் இந்தப் பிறவியில் மீதமுள்ள மூன்று வயதினை எட்டும் போது அவருக்கு ஞானம் கிட்டியிருக்கிறது அதே போன்றுதான் திருநாவுக்கரசரும் முந்தைய பிறவியில் ஆன்மீகப் பக்கம் குறைவாகவே வாழ்ந்துள்ளார்
இருந்தும் அந்த சிறு ஆன்மீக வாசனையானது அவரை இப்பிறவியெடுக்க செய்து முழுமையாக இறை சேவை செய்து கடந்த பிறவி வினைகளை கடந்து 70 வயதில் ஞானத்தை பெற்றிருக்கிறார். 
உதாரணத்திற்கு காடொன்றுக்குள் காட்டின் தன்மை மற்றும் அங்குள்ள கொடிய மிருகங்கள் பற்றி அறியாமல் பலர் செல்கிறார்கள் சென்றவர்களில் பலர் அக் கொடிய மிருகங்களின் பிடியில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் ஒரு சிலரே அந்த விலங்குகளிடம் இருந்து தப்பித்து வருகிறார்கள் அது போல்தான் பலர் உலக விடயங்களை பெரிதாக எடுத்து அதன் மூலம் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் துன்பப்பட்டு இறந்து போகிறார்கள் ஒரு சிலரே அத் துன்பத்திலிருந்து விடுபட்டு மேலே வருகிறார்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும் ஒரே பொருளைத்தான் தருகின்றன; ஞானிகள் ஸ்தூல சரீரத்தை பார்ப்பதில்லை அவர்கள் சூட்சும சரீரத்தினையே பார்க்கிறார்கள் ஏனெனில் சூட்சுமமே உண்மை ஸ்தூலம் அழியக்கூடியது என்பதனை தமது தவத்தால் உணர்ந்தவர்களே ஞானிகள் அதனால்தான் பல சூட்சும உண்மைகளை கதைகளாக கூறி மக்களுக்கு இலகுவில் புரிய வைக்க முயல்கிறார்கள்….(தொடரும்)

கரும வினைகளை களைவோம்; பாகம்-01
கீழே உள்ள இணைப்பை சொடுக்கி இத் தொகுப்பின் முதலாவது தொடரை படித்திடுங்கள்👇👇👇👇
https://www.maarutham.com/2020/06/01.html


“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”
 
ஸ்ரீ பேரின்பஞான பீடம்
பெரிய உப்போடை வீதி
இல.07
மட்டக்களப்பு
இலங்கை
T.P-0094652226801
 

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -