HomeSpiritualகரும வினைகளை களைவோம்; பாகம்- 01

கரும வினைகளை களைவோம்; பாகம்- 01

இன்று உலகமே நோய்ப்பிணி, பசிப்பிணி போன்ற பயங்கர வேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் விண்ணைப் பிளக்கிறது தர்ம வழியில் பயணிப்போரையும் கலி பீடித்துக் கொண்டு அவர்களையும் துன்புறுத்த விளைகிறது; இந்த கொடிய நிகழ்வுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? இவற்றிலிருந்து மானிட சமுதாயம் மீட்சி பெறும் வழிகள் என்ன? அனைவருக்கும் இலகுவில் புரியும் விதத்தில் சிவ பூமி எனப்படும் இலங்கை  புண்ணிய பூமியிலே அகஸ்திய மகரிஷியினை மூல குருவாக கொண்டு கண்ணையா யோகி மகரிஷிகளின் வழி வந்த காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளின் ஆன்மீக வாரிசான  ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் அருளப்பட்ட உலக மக்களின் அத்தனை துன்ப துயரங்களையும் போக்கவல்ல அரு மருந்தாக இந்த உபதேசத் தொகுப்பினை தொடர்ந்தும் பாகம் பாகமாக தரவிருக்கிறோம்.
0c91bc73 602e 4e37 8d9c 298774a7578aகரும வினைகள் என்றால் என்ன?
தாயும் தந்தையும் இணையும் போது கரு உருவாகி குழந்தை பிறக்கிறது அவர்களின் ஏழேழு பிறவி கரும வினைகள் அனைத்தும் அந்த கருவினோடு ஒட்டிக் கொண்டு இருக்கும்; உயிரணு ஒன்று தாயின் கருவில் புகுந்து அது தன்னைத்தானே உருவாக்கி கொள்கிறது அதாவது தாயின் கருவில் இருந்தவாறே தன்னை முழுமையாக்கவும் தன் உடல் வளரவும் தேவையான சத்துக்களை பெறுவதற்காக கருவில் தன்னை ஏந்தியுள்ள தாயின் மனதிற்கு தனக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ள அவருக்கு எண்ணத்தை உண்டாக்கி அந்த உணவை உண்ண வைத்து அவ் உணவிலிருந்து தன் வளர்ச்சிக்கு தேவையான உயிர் சத்துக்களை பிரித்தெடுத்து அகத்துறிஞ்சி அந்த உயிரணு தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு முழுமையடைந்து குழந்தையாக பிறக்கிறது.
பிறப்பின் முன்னர் நிகழும் இச் சம்பவத்தினை உற்று நோக்கினால் 
அங்கு தாயின் கருவில் சென்று தன்னைத்தானே உருவாக்கி கொள்ளும் அந்த உயிரணுவிற்கு பெயர்தான் கடவுள்; கருவில் உயிரணு இருந்தாலும் அது தன்னைத்தானே உருவாக்கி கொள்ள உணவு முக்கியமாகிறது அதுதான் மனித உடலினை அன்ன மய கோசம் என்று குறிப்பிடுகிறார்கள்.
நிலத்தில் விளைந்த உணவுகளை மூலமாக கொண்டு உருவாகும் மனித உடலானது இறுதியில் நிலத்தோடு சங்கமித்து போகிறது என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறதல்லவா! 
ஆக மனதில் எண்ணத்தை உண்டாக்கி அதன் மூலம் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளும் உயிரணுவானது தன் உடல் முழுமையடைந்த பின்னர் இவ்வுலகில் பிறப்பெடுக்கிறது; இவ்வாறு தாய்க்கு எண்ணத்தை உண்டு பண்ணி அதன் மூலம் தன் உடல் வளர சத்து நிறைந்த உணவுகளை அத் தாயினை உண்ண வைத்து தன்னைத்தானே உருவாக்கிக்  கொண்டு இவ்வுலகில் பிறந்திருக்கும் மனிதர்களுக்கு ஏன் தனக்கு ஏற்படக்கூடிய நோய் துன்பங்களை சரி செய்ய முடியாமல் போகிறது?
தாயின் கருவில் உள்ள போது தனது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தன் தாய்க்கு எண்ணத்தின் மூலம் உண்டு பண்ணி அதனை உடனுக்குடன் எந்த தடையுமில்லாமல் உயிரணுவானது பெற்று தன்னை தானே வளர்த்துக் கொண்டது; அங்கே தாயானவருக்கு அந்த எண்ணத்தை உள்வாங்கி செயல்படுமளவிற்கு அவரது மனம் சலனமற்றிருப்பதால் எவ்வித தடையுமில்லாமல் அனைத்து சத்துக்களும் உயிரணு ஏற்படுத்திய எண்ணத்தின் மூலம் கிடைக்கப் பெற்றது ஆனால் அதே உயிரணு தான் முழுமையடைந்து வெளியுலகிற்கு குழந்தையாக வந்து  பிறந்ததும் அக் குழந்தை பிறந்த சூழல், தன்மைகள், தாய் தந்தையரின் ஏழேழு ஜென்ம கரும வினைகள் என அனைத்தும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது கருவில் உயிரணுவாக இருந்து தன்னைத்தானே படைத்துக் கொண்ட படைப்பாளியின் இறைத் தன்மை மழுங்கடிக்கப்படுகிறது இச் சூழ்நிலையின் போது தான் உருவாக்கிய உடலுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்திக்கவோ குணப்படுத்தவோ முடியாமல் அறியாமை எனும் கரும வினை மறைத்து நிற்கிறது.
இதனை மாயை என்றும் கூறுவார்கள் உதாரணத்திற்கு இங்கு ஒரு விடயத்தினை ஆராய்ந்து பார்ப்போமானால் ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு குழந்தையானது உடல் குறைபாட்டோடும் வளர்ச்சி குன்றியதாகவும் பிறந்து விடுகிறது அவ்வாறு ஏன் நிகழ்கிறது என்று பார்ப்போமானால் இச் சம்பவத்தினை யதார்த்தமாக தாய் தகப்பன் செய்த வினை என்று கூறுவார்கள்.
உண்மையில் இக் கரும வினைகளின் செயல்கள் அனைத்தும் மனிதர்களின் மனதில் எண்ணத்தினை உதிக்கச் செய்வதன் மூலமே செயல் நிகழ்கிறது. 
உதாரணத்திற்கு ஒருவருக்கு இன்றைய தினம் குறிப்பிட்ட நேரம் ஒன்றிற்கு விபத்தொன்று நிகழவேண்டும் என்ற கரும வினை நிச்சயிக்கப் பட்டிருந்தால் அது அச் சம்பவம் நிகழும் நேரம் பார்த்து வீட்டில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவரையோ அல்லது வேறேதும் வேலையில் ஈடுபட்டிருந்தவரையோ ஒரு தேவையொன்றினை மனதில் உதிக்கச் செய்து தெருவிலே பயணிக்க செய்து குறித்த நேரத்தில் அவ் விபத்தானது நிகழ்ந்து விடுகிறது அல்லது வினைப்பயனாக நிகழ்த்தப்பட்டு விடுகிறது; தெய்வாதீனமாக நல் வினைகள் கூடியவராக அதே நபர் இருந்திருந்தால் அச் சமயம் பார்த்து தொலைபேசி அழைப்பு ஒன்றிலே யாரோ ஒருவர் அழைத்து நான் உங்களை சந்திக்க வருகிறேன் நீங்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருங்கள் என்று கூறும் போது ஒரு வேளை அதனை ஏற்று  தெருவிற்கு செல்லாமல் இருந்திருந்தால் அவ்வாறு விபத்து நிகழ வாய்ப்பில்லைதானே ஆக இவ்வாறுதான் கரும வினைகளின் செயல்கள் மனிதர்களின் மனதிற்கு சந்தர்ப்பம் சூழலுக்கேற்பவும் எவ்வாறான கரும வினைகள் அதிகமாக காணப் படுகிறதோ அது முந்திக் கொண்டும் செயல்பட ஆரம்பிக்கும் உதாரணத்திற்கு வெளிநாட்டுக்கு செல்லும் ஒருவர் முதலில் தன் உறவினர்களையும் சொந்தபந்தங்களையும் அங்கு அழைத்தெடுப்பதனைப் போன்ற நிகழ்வாக கரும வினைகளும் எந்தப் பக்கம் அதிகமாக உள்ளதோ அது நல்லதோ கெட்டதோ அதுவே முதலில் செயற்பட ஆரம்பிக்கும்.
unnamed%2B%252841%2529
இவ்வாறுதான் தாயின் கருவில் இருக்கும் உயிரணுவானது தன்னைத்தானே வளர்த்துக் கொள்வதற்காக அதற்குண்டான உயிர் சக்திகளை பெறுவற்காக தாயின் மனதிற்கு எண்ணத்தை உண்டாக்கி அதன் மூலம் தாயினை குறித்த உணவுகளை உண்ண வைத்து தனக்குரிய சத்துக்களை அகத்துறிஞ்சி உடலை வளர்த்துக் கொள்ளுகிறது என்று பார்த்தோம் இவ்வாறு தனக்கு தேவையான சக்தி தரக்கூடிய உணவை உட்கொள்ள கருவில் வளரும் உயிரணு தாயின் மனதிற்கு எண்ணத்தை ஏற்படுத்தும் போது தாய் மனம் சஞ்சலமான நிலையில் காணப்பட்டால் அந்த உணவினை உட்கொள்ளும் எண்ணத்தை அவரால் நிறைவேற்ற இயலாமல் போகிறது அதன் போது அந்த உயிரணு தனக்கு தேவையான சக்தியினை பெற்றுக் கொள்ள இயலாமல் குறைபாடுடைய குழந்தையாக பிறந்துவிடுகிறது.
அங்கே அந்த உயிரணுவின் எண்ணத்தை உள்வாங்கி செயல்படுத்த இயலாமல் கரும  வினையானது தடுத்து விடுகிறது முன்பு உயிரணுவானது தாயின் கருவில் இருக்கும் போது எந்த தடையுமில்லாமல் தாயின் மனதோடு பேசி தனக்குரிய சக்தியினை பெற்றுக் கொண்டு வளர்கிறது ஆனால் சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் அந்த தாயானவர் சலனத்தினையோ அதிர்ச்சியினால் உறைந்து போகும் நிலையேற்பட்டாலோ உயிரணுவானது தனக்கு தேவையான சத்தினை பெற்றுக் கொள்வதற்காக பிறப்பிக்கும் எண்ணத்தை அந்த தாய் செயல்படுத்த இயலாதவாறு அங்கு கரும வினை தடுத்து விடுகிறது என்று தெளிவடைய முடிகிறது; ஆக எண்ணத்தின் மூலமாகத்தான் கரும வினைகள் மனிதர்களை தொடர்கிறது இது உடல் ரீதியாக நிகழும் சம்பவம் அல்ல உள்ளத்தின் தொடர்புடன் நிகழும் சம்பவம் என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.
தாய் தகப்பன் ஏழேழு ஜென்மங்களில் செய்த கருமாக்கள் உயிரணு தாயின் கருவிற்கு சென்ற போதிருந்தே தொடர ஆரம்பித்தாலும் சந்தர்ப்பம் சூழலுக்கு அமைவாக அந்த வினைகள் மனிதர்களுக்கு சம்மந்தப்பட்ட எண்ணத்தை உண்டாக்கி அது சார்ந்த செயலினை வழங்குகிறது உதாரணத்திற்கு பல வருடங்களுக்கு முன்னர் புளியம் பழத்தை உண்டிருந்தோமானால் அதன் புளி எனும் தன்மை மனதில் பதிந்து இருக்குமல்லவா இதனை வாசனை என்பார்கள் அதனை நினைக்கும் போதோ அல்லது புளியமரத்தை காணும் போதோ வாயில் எச்சில் சுரக்குமல்லவா!  உதாரணத்திற்கு மண் பானையொன்றில் சில நாட்களுக்கு பெருங்காயத்தினை இட்டு வைத்திருந்து விட்டு அதனை வெளியில் எடுத்து எறிந்து விட்டாலும் அதன் வாசனை பல நாட்களுக்கு அந்த பானையினுள் வீசுமல்லவா அதே போன்றுதான் பூர்வ ஜென்ம கருமாக்களின் வாசனைகள் சித்த மனத்திலே பதிந்துள்ளது அவை செயற்படுவதற்கான சந்தர்ப்பம் சூழல் அமையும் போது மனிதர்களுக்கு கரும வினைகள் தொடர்கிறது.
இருந்தும் தாயின் கருவில் இருக்கும் போது எண்ணத்தை உண்டாக்கி தேவையான அனைத்து சத்தினையும் பெற்று தன்னைத்தானே உருவாக்கிய மனிதனுக்கு பிறந்த பின் அவ்வாறு எண்ணத்தை பலமாக்கி அதன் மூலம் அனைத்தையும் பெற்று கரும வினைகளை வென்று வாழலாம் எனும் விடயம் மனதில் புதையுண்டு போன விடயமாகிவிட்டது அவ்வுண்மையினை அகழ்ந்து செயல் நிலைக்கு கொண்டு வரவும் மனிதர்களின் உயிர்ச்சக்திதான் இறைவன் என்பதனை உணர்த்திடவுமே இவ் ஆன்மீகத் தொடர் பல பாகங்களாக பக்தர்களினதும் ஆன்மீக அன்பர்களின் பார்வைக்குமாக வெளிவர இருக்கிறது எனவே தொடர்ந்தும் இவ் உபதேசத் தொகுப்பினை படித்து வருவீர்களேயானால் முடிவில் முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கையினை எந்த தடையுமில்லாமல் வாழ வழி கிடைக்கும் என்பதனை தீர்க்க தரிசனமாக கூறி வைக்கிறோம்.
 (தொடரும்)


கரும வினைகளை களைவோம்; பாகம்-02….முன் ஜென்ம தொடர்புகள்
 கீழே உள்ள இணைப்பை சொடுக்கி இத் தொகுப்பின் இரண்டாவது தொடரை படித்திடுங்கள்👇👇👇👇👇👇

https://www.maarutham.com/2020/06/02-spiritual-spirituality.html


“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”
 

ஸ்ரீ பேரின்பஞான பீடம்
பெரிய உப்போடை வீதி
இல.07
மட்டக்களப்பு
இலங்கை
T.P-0094652226801
 
- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -