- Advertisement -
Home India மருத்துவமனையில் தீ விபத்து; 8 பேர் பலி!!

மருத்துவமனையில் தீ விபத்து; 8 பேர் பலி!!

- Advertisement -

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்​ கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் தலைநகர் ஆமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்தனர். 40 பத்திரமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ .2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் நிலைமை குறித்து முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மேயர் பிஜால் படேல் ஆகியோரிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

gujarat fire 759 ap62afa38df96947eb99e94c8de6e46ea0 aa Cover qo4lkc94037m2ug36rq5r9q8a6 20200806094811.Medi download 1 shrey

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here