HomeSrilankaஇலங்கையில் மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்; கல்வி அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்; கல்வி அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளும் இன்றைய தினம் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய அட்டவணையின்படி 5ஆம், 10ஆம், 11ஆம் மற்றும் 13ஆம் வகுப்புக்களின் மாணவர்கள் வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். 1ஆம், 2ஆம், 3ஆம் வகுப்பு மாணவர்கள் வாரத்தில் ஒருநாள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதேவேளை 200 மாணவர்களும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களும் இன்று ஆரம்பமாகின்றன. மாணவர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகளில் முதலாம் வகுப்பும், ஐந்தாம் வகுப்பும் திங்கட்கிழமைகளில் திறக்கப்படும். 2ஆம் வகுப்பும் 5ஆம் வகுப்புக்கும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்படும். 3ஆம் ஐந்தாம் வகுப்புக்கள் புதன்கிழமைகளில் திறக்கப்படும். 4ஆம், 5ஆம் வகுப்புக்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் திறந்திருக்கும். 200 மாணவர்களுக்கும் அதிகமான வகுப்புக்களைக் கொண்ட இரண்டாம் நிலைப்பாடசாலைகளில் 6, 10, 12, 13ஆம் வகுப்புக்கள் திங்கட்கிழமைகளில் திறக்கப்படும். 7ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம், 13ஆம் வகுப்புக்கள் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்படும். 8ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம், 13ஆம் வகுப்புக்கள் புதன்கிழமைகளிலும் திறக்கப்படும். 9ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம், 13ஆம் வகுப்புக்கள் வியாழக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் திறக்கப்படும். இருப்பினும் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புக்களுக்காக பாடசாலைகள் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 1.30வரை திறக்கப்படும். 10, 11, 12, 13ஆம் வகுப்புக்களுக்கான பாடசாலைகள் காலை 7.30க்கு திறக்கப்பட்டு பிற்பகல் 3.30க்கு மூடப்படும். இதேவேளை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க வேண்டாம் என்று பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கு சிறு தயக்கம் கொரோனா அச்சம் காரணமாக. தற்போது எமது பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்கள் காணப்படவில்லை. ஆகவே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லலாம். இருப்பினும் பாடசாலையில் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். ஒரு மாணவர் மற்ற மாணவரை தொடுவதை அல்லது மிக அருகில் செல்வதை தவிர்த்து கொள்ளுவது நல்லது. தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் Face mask இனை அணிந்தால் போதுமானது. துணியினாலான Face maskஆயின் அவற்றை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது நன்று. பாடசாலையில் மாணவர் ஒருவருக்கு காய்ச்சல், தடிமன் போன்ற சிறு வியாதிகள் ஏற்படுகின்றபோது பதட்டப்படாமல் அவரை வீட்டுக்கு அல்லது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பது நன்று. மாணவர்களிடையே இந்நோய் பற்றிய விழிப்புணர்வை தொடர்ச்சியாக வழங்குவதோடு பதட்ட மற்ற பாடசாலை சூழ்நிலை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -