- Advertisement -
Home Lifestyle காட்டுப் பன்றியிடம் இருந்து லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய மனிதர்! வைரல் போட்டோ

காட்டுப் பன்றியிடம் இருந்து லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய மனிதர்! வைரல் போட்டோ

- Advertisement -

ஜெர்மனியில் லேப்டாப்பை பையோடு தூக்கிச் சென்ற காட்டுப் பன்றியைப் பிடிப்பதற்காக, ஏரியில் குளித்துக் கொண்டிருந்தவர் நிர்வாணமாக ஓடிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள கிரன்வெல் வனப்பகுதியில் டீஃபெல்ஸி  என்ற அழகிய ஏரி உள்ளது. இங்கு பல பயணிகள் வந்து இயற்கை எழிலை ரசித்து விட்டு, ஏரியில் குளித்துச் செல்வார்கள். இப்படியான சூழலில் டீஃபெல்ஸி ஏரிக்கு உலா வந்த ஒருவர், இயற்கை சூழலை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

பின்னர், ஏரியில் குளிப்பதற்கு முடிவு செய்த அவர், தான் கொண்டு வந்த பொருட்கள், பைகளை எல்லாம் கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது அங்கு உணவு தேடி வந்த சில காட்டுப்பன்றிகள் இவரது பையை மோப்பம் பிடித்தது. பின்னர், பையில் இருந்த பீட்சா, பர்கர் உணவுகளை சாப்பிட்டது.

ஏரியில் குளித்துக் கொண்டிருந்த நபர் திடீரென கரையைப் பார்த்த போது, பன்றிகள் பையை கவ்விக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது தான் அவருக்கு பையில் விலையுர்ந்த லேப்டாப் இருந்தது நினைவிற்கு வந்தது.

பதற்றத்தில் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதையும் மறந்து கரையை நோக்கி வந்தார். இவர் வருவதைப் பார்த்த பன்றிகள், லேப்டாப் பையை லாவகமாக வாயில் கவ்வி எடுத்துச் சென்றது. பன்றியைப் பிடிக்க அந்த மனிதரும், இடுப்பில் ஒரு துண்டு துணி கூட இல்லாமல், வேகமாக துரத்திச் சென்றார்.

இந்த சம்பவத்தை அடீல் லேண்டவுர் என்ற சுற்றுலா பயணி அப்படியே போட்டோ எடுத்து விட்டார். பின்னர், அந்த மனிதரின் அனுமதியோடு ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்தப் படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களைப் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர்.117170720 10207757965983312 3374389160395581480 n 1 117236812 10207757966743331 7133077510145728688 n 116877271 10207757966023313 321285946944817643 n

காட்டுப் பன்றிகளிடம் இருந்து லேப்டாப்பை மீட்பதற்காக, மனிதர் நிர்வாணமாக ஓடிய படத்தை பார்ப்பதற்கு இங்குக் க்ளிக் செய்யவும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here