HomeCinemaகியானு ரீவ்ஸின் John Wick ஃபேனா நீங்க; இந்த அப்டேட் உங்களுக்கு தான்.!!

கியானு ரீவ்ஸின் John Wick ஃபேனா நீங்க; இந்த அப்டேட் உங்களுக்கு தான்.!!

பொழுதுபோக்குத் துறை ஸ்தம்பித்து நிற்கும் இந்த இக்கட்டான நிலையிலும், ​​கியானு ரீவ்ஸை நிறுத்த முடியாது போல் இருக்கிறது. ஜான் விக்-4 திரைப்படம் கூட இன்னும் தயாரிக்கப்படவில்லை, ஆனால் ஜான் விக்-5 நடக்கும் என்று லயன்ஸ்கேட் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய தொற்றுநோய் தீர்ந்ததும், கீனு ரீவ்ஸ் செட்டுகளுக்குத் திரும்பியதும், வரவிருக்கும் இரண்டு தொடர்ச்சிகளும் படமாக்கப்படும் என்று லயன்ஸ்கேட் ஸ்டுடியோ அறிவித்தது.

ஜான் விக் திரைப்படத் தொடர் உலகளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இதன் முதல் பாகம் அதன் உள்நாட்டு வெளியீட்டில் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது, இரண்டாவது படம் 92 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது, மூன்றாவது படம் மொத்தமாக 171 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்தது. உலகளாவிய வருவாய் இது போன்று உயர்ந்துகொண்டே இருக்கிறது.

ஜான் விக்கின் அடுத்த இரண்டு பாகங்களுக்கான ஸ்கிரிப்ட்களை தயாரிப்பதில் மும்முரமாக இருப்பதாகவும், ஜான் விக் 4 திரைப்படம் 2022-ல் திரையரங்குகளில் வெளிவரும் என்றும் லயன்ஸ்கேட் ஸ்டுடியோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஃபெல்டெய்மர் ஒரு தனியான பத்திர்க்கையில் அறிவித்தார். ஜான் விக்-4 தற்போது 2022 மே 27-ஆம்்தேதி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -