- Advertisement -
Home Cinema 'திரையுலகில் 45ம் ஆண்டு' - சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து Common Dp வெளியிட்ட மோகன்லால்!!

‘திரையுலகில் 45ம் ஆண்டு’ – சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து Common Dp வெளியிட்ட மோகன்லால்!!

- Advertisement -

‘சிவாஜி ராவ் கேக்வாட், இவர் பெங்களூரு நகரில் 1950ம் ஆண்டு பிறந்த ஒரு சாமானியன். இளம் வயதில் முளைத்த சினிமா ஆசையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனது படிப்பை முடித்த அந்த சிவாஜி ராவ் அப்போது தனக்கு கிடைத்த வேலைகளை செய்துவர, ஒரு காலகட்டத்தில் பேருந்து நடத்துனராக தனது காலத்தை கடத்தினர். அன்றைய மதராஸ் நகரம் நோக்கி தனது கலை பயணத்தை மேற்கொண்டார். மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தனது நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார் சிவாஜி ராவ்.

ஆரம்ப காலத்தில் பல சறுக்கல் வர, இயக்குனர் சிகரம் என்ற மாமனிதரின் பார்வை இவர் மேல் விழுந்தது. இவர் நடிப்பை பார்த்த பாலச்சந்தர் நீ ஜொலிக்கும் நட்சத்திரத்தை போல மின்னப்போகிறாய் என்று கூறி ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு 1975ம் ஆண்டு வெளியானது ‘அபூர்வ ராகம்’ என்ற திரைப்படம். 1975 தொடங்கி 1980-க்குள் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் அன்போடு இவரை தலைவர் என்று அழைக்க சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு தமிழ் திரையுலகின் முடிசூடிய மன்னனாக விளங்குகிறார்.

தற்போது இந்திய திரையுலகில் தனது 45வது ஆண்டை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அரசியல் என்ற தளத்தில் இவர் மேல் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் நடிப்பு என்று வரும்போது இவருக்கு நிகர் இவரே என்பது பலரின் கருத்து. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல ரசிகர்கள் இருப்பதை போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல முன்னணி நடிகர்களே ரசிகர்களாக உள்ளனர் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here