- Advertisement -
Home Cinema 'நீங்கள் இல்லாமல் நான் இல்லை' - வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!!

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ – வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!!

- Advertisement -

‘சிவாஜி ராவ் கேக்வாட், இவர் பெங்களூரு நகரில் 1950ம் ஆண்டு பிறந்த ஒரு சாமானியன். இளம் வயதில் முளைத்த சினிமா ஆசையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனது படிப்பை முடித்த அந்த சிவாஜி ராவ் அப்போது தனக்கு கிடைத்த வேலைகளை செய்துவர, ஒரு காலகட்டத்தில் பேருந்து நடத்துனராக தனது காலத்தை கடத்தினார். அன்றைய மதராஸ் நகரம் நோக்கி தனது கலை பயணத்தை மேற்கொண்டார், மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தனது நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார் சிவாஜி ராவ்.

ஆரம்ப காலத்தில் பல சறுக்கல் வர, இயக்குநர் சிகரம் என்ற மாமனிதரின் பார்வை இவர் மேல் விழுந்தது. இவர் நடிப்பை பார்த்த பாலச்சந்தர் நீ ஜொலிக்கும் நட்சத்திரத்தை போல மின்னப்போகிறாய் என்று கூறி ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு 1975ம் ஆண்டு வெளியானது ‘அபூர்வ ராகம்’ என்ற திரைப்படம். 1975 தொடங்கி 1980-க்குள் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் அன்போடு இவரை தலைவர் என்று அழைக்க சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு தமிழ் திரையுலகின் முடிசூடிய மன்னனாக விளங்குகிறார்.

f8c223c83bd738dde10689b641127b98தற்போது இந்திய திரையுலகில் தனது 45வது ஆண்டை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.” என்று கூறி #நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here