HomeLifestyleநீரிழிவு நோய்க்கான 11 சிறந்த சமையல் ரெஸிபிகள்!

நீரிழிவு நோய்க்கான 11 சிறந்த சமையல் ரெஸிபிகள்!

நீரிழிவுவுக்கு உகந்த சமையல் குறிப்பு –
சாக்லெட் புட்டிங், பழங்கள் மற்றும் பாலாடைக்கட்டியால் செய்யப்பட்ட மிகவும் இனிப்பான கேக்குகள். ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதென்று கண்டற்யப்பட்டால், இனிப்பு வகை உணவிற்கு பிரியாவிடை கொடுக்க வேண்டும் சரிதானே? தவறு.  “மக்களை எல்லா நேரமும் இவற்றை உண்ண அனுமதிக்காமல் தடுக்கும்போது, விரக்தியடைந்து அவர்கள் அளவை மீறி உண்ணுகிறார்கள்” என்று பிரிமஸ் மருத்துவமனையின் நீரிழிவு நிபுணரும் டெல்லி நீரிழிவு ஆய்வுத்துறையின் தலைவருமான டாக்டர்.ஏ.கே.ஜிங்கன் கூறுகிறார். ஒரு ஆரோக்கியமான நீரிழிவு நோயிக்கான உணவு என்பது, சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதிக சர்க்கரையளவுள்ள பானங்களைவும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்பதே பொதுவான விதியாகும். ஆனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியற்ற மந்தமான நிலையை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.

அவர் மேலும், “இரத்தச் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்கும் குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்பதை பழகிக்கொள்ள வேண்டும்” எனவும் கூறுகிறார். எனவே நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனத்துடன், உணவுப்பழக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடலாம் என பார்த்துக்கொண்டிருக்கும் போது, கண்டிப்பாக சாக்லெட் சாப்பிடக்கூடாது என யார் கூறியது? நீங்கள் இப்பொழுதும் கதகதப்பும் சர்க்கரையற்ற சாக்லெட்பானங்களை எடுத்துக் கொள்ளலாம்

hot chocolate

இது போன்ற நீரிழிவுக்கு உகந்த உணவுகளால் குற்றவுணர்ச்சியை போக்கி மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஒருவேளை நீங்கள் பழ விரும்பிகளாக இருந்தால், அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் ஆவிர்கள். ஏனெனில் எளிதான மற்றும் ஆரோக்கியமான வழியில் நார்ச்சத்துகளை பெற இயலும். இதனை அன்றாட உணவில் சேர்க்க விரும்பினால், இயற்கையிலேயே குறைவான சர்க்கரை அளவைக் கொண்ட முலாம் பழம். ஆப்பிள், பெரி வைகப் பழங்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

சில சமயங்களில் உங்களின் சுவை அரும்புகள், வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் போன்றவற்றைக் கடந்து இன்னும் கொஞ்சம் அதிகமான சுவையை சுவைக்க விரும்பினால், அதற்கும் வழியுண்டு. நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தால், கொட்டை வகைகள் மற்றும் உலர்ந்த பழங்களான பாதாம், திராட்சை போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

இவற்றுள் பாதாம் இரத்தச்சர்க்கரைவின் அளவை குறைக்கவல்லது. புரத அளவை முழுமையாக சேர்த்து இரத்தச்சர்க்கரைவின் அளவை நிலையாக வைக்க உதவும் தானிய வகைகளான திராட்சை மற்றும் பனீர் போன்றவற்றையும் நீங்கள் சேர்த்துக் கொள்ள்லாம். கேரட், கொத்தமல்லி அல்லது ப்ராகோலி போன்றவற்றில் அதிகளவு வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. இவையல்லாது வெள்ளரி, மிளகு, கேரட் மற்றும் ப்ராகோலி ஆகியவற்றை பயன்படுத்தி ஹம்மஸ் வகை உணவுகளையும் சமைக்கலாம். இவை கலோரிகளை அதிகளவில் கொண்டிருந்தாலும் நார் மற்றும் ஊட்டச்சத்துகளையும் உள்ளடக்கியது.

cucumber dip

எங்களின் நீரிழிவு நோய்க்கான சிறந்த சமையல் குறிப்பானது கொழுப்பு, கலோரி மற்றும் சர்க்கரையை நீக்குவதற்கு சில மாற்றங்களோடு கூடியää ஆனால் சுவையில் எவ்வித குறைவும் இல்லாத கண்கவரும் வகையில் இருக்கும். இந்த ரெஸிபிகளை பண்டிகை விருந்து மற்றும் எந்தவொரு விருந்திலும், அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கான போர்டிஸ்-எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர்.ரூபலி டட்டா பரிந்துரைத்தபடி குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் கூடிய சில சமையல் குறிப்புகளைக் குறித்துக் காண்போம்.

1. கொழுப்பு குறைந்த பட்டர் சிக்கன்

எளிதாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய இச்செய்முறையானது சுவையில் நம்மை கரைய வைக்கக்கூடியது. இது குறைந்த அளவு வெண்ணையைக் கொண்டிருப்பதால் மகிழ்வளிக்கிறது. இதனை இரவு நேர விருந்துகளில் நாண், பரோட்டா மற்றும் சாதம் போன்றவற்றுடன் இணைத்து விருந்தாளிகளை பிரம்மிப்பில் ஆழ்த்தலாம். ஒரு டீஸபூன் அளவை எடுத்து நீங்களோ அல்லது உங்கள் விருந்நாளிகளோ உண்டால் வேறுபாடே கூற இயலாது.

butter chickenA super easy butter chicken recipe sans any butter!

2. சர்க்கரையில்லா அரிசி புட்டு

எலுமிச்சை இலையின் தண்டு, சிறிதளவு இலவங்கம், ஜாதிக்காய் போன்றவையை பயன்படுத்தி செய்தால், இது நம்முடைய விருப்பமான உணவாக மாறிவிடும். இதனுடன் அன்னாசிப்பழம், இஞ்சி இவற்றின் சேர்க்கையால் சுவையான கலவையாக பரிமாற இயலும்.

sugar free rice pudding

A delectable sugar-free rice pudding for all the diabetics with a sweet tooth and for those who wants to cut down on the calories!

3. கொழுப்பு குறைந்த கொத்தமல்லி சூப்

உங்களின் வயிறு பசியால் உறுமும்போது, பசியாற்றவும் அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காமலும் இருக்க ஒரு திண்பண்டம் தேவைப்படுகிறது. நீங்கள் அறிவீர்களா? ஒரு பெரிய கொத்தமல்லியில்10 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே இதனை ஊட்டச்சத்துகளும், கலோரிகளும் நிறைந்த மற்ற கீரைகளோடு சேர்த்து சூப் வடிவில் அருந்தலாம்.

celery soupA perfect combination of celery with other vegetables to create a filling bowl of soup.

4. கொழுப்பு குறைந்த பெப்பர் சிக்கன் வறுவல்

நீரிழிவு நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த ஆந்திரா வகை சிக்கன் செய்முறையில் ஊறவைத்த மிளகு, மஞ்சள் சேர்த்து செய்ய வேண்டும். சிவப்பு மிளகாய் சேர்த்து அலங்கரிக்க விருந்துகளில் அனைவராலும் விரும்பக்கூடிய உணவாகிவிடும்.

chickenA chicken recipe, specially curated for the calorie conscious!  

5. டூ இன் ஒன் பிர்னி (சர்க்கரையற்றது)

அரிசி, பால், பிஸ்தா, பாதாம், ஏலைக்காய் போன்றவற்றை சேர்த்து தரமான தித்திக்கும் புட்டு செய்யலாம். சர்க்கரையை நீக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்த்து சுவையக் கூட்ட இனிப்பிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான பதிலாக விளங்கும்.

phirni
A simple rice pudding with two layers – a pista layer and one flavored with rose essence. Indulgent!

6. கொழுப்பு குறைந்த பிரெஞ்சு வெங்காய சூப்

கொழுப்பு குறைவாகவும், விரும்பத்தக்கதாகவும் இருப்பதால் நீங்கள் ஏமாற்றமடையாமல் இருக்க இந்த டிஷ் சரியான தேர்வாக இருக்கும். ஒரு முறை இந்த பழமையான தரமான பிரஞ்ச் வெங்காய சூப்பை சுவைத்தால், மற்ற உணவை சுவைக்க விரும்ப மாட்டீர்கள்.

french onion soupThe classic french soup but this time, it is low fat! All the more reason to savour more.

7. கன்னியாகுமரி எண்ணையில்லா மீன் கறி

தேங்காய்ச் சுவையோடும், எண்ணெய் இல்லாமலும் இருப்பதால் இந்த மீன் கறி ஆச்சரியப்படுத்தும் சுவையில் உள்ளது. இதற்கு தேங்காய், மஞ்சள், லேசான மசாலா போன்றவை தேவைப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் தேவையில்லை. எனவே இந்த சிறந்த உணவை, உணவு முறையில் மாற்றத்தை விரும்பும் அனைவரும் உண்ணலாம்.

fish curryThe perfect dinner recipe without indulging in too much oil. Delicious, healthy and nutritious, need we say more?

8. கொழுப்பு குறைந்த சிக்கன் ஷவர்மா

நீங்கள் உணவை ‘ரோல்’ செய்த நிலையில் உண்ண விரும்புகிறீர்களா? ஏனில் இது சிறந்த தேர்வு. வறுத்த சிக்கன், வெங்காயம், தக்காளி, மிளகாய் போன்றவற்றைக் கலந்து இந்த கொழுப்பு குறைந்த சிக்கன் ஷவர்மாவை செய்யலாம். இதனுடன் தயிர் சார்ந்த சாஸை சேர்த்து உண்ணலாம். இதுவே உணவின் வெற்றியாளர்.

chicken shawarmaA delicious recipe from the Middle-Eastern land, this low-fat chicken shawarma is the winner of hearts!

9. சர்க்கரையற்ற க்ரானோலா

இது சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. சூரியகாந்தி மற்றும் எள்ளின் விதைகள், தேன் சேர்க்காத ஓட்ஸ் போன்றவற்றை நிரப்பி அவற்றுடன் முளைகட்டிய பாதாம், பழங்கள், தயிர் போன்றவற்றையும் சேர்த்து இதனை செய்ய வேண்டும்.

sugar freePowerhouse of nutrients, Sugar Free Granola is the ultimate mid-day meal that will keep you energized all day long.

10. கொழுப்பு குறைந்த தாகி சிக்கன்

தயிர், கரம் மசாலா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட சிக்கன் கறியானது அதிக புரதத்தையும், குறைந்த கார்போஹைட்ரேட்டையும் கொண்டதால் நீரிழிவிற்கு உகந்நது.

COMMENTS

chicken curry
A chicken curry that is nothing short of delicious and when it is low fat, do you even have to think anything else to cook for dinner?

11. பல்தாரி பாதாம் கி பர்பி (சர்க்கரையற்றது)

  இந்த சுவையான விழாக்கால உணவானது நீர்க்குறைந்த பழங்களையும், பாதாம், பிஸ்தா, அத்தி ஆகியவற்றை மாவா என்றவற்றுடன்  சர்க்கரையற்று கலந்து தயாரிக்கப்படுகிறது. இது உடல்நலத்தை பாதிக்காததால் தீபாவளி போன்ற விழாக்களில் செய்து மகிழலாம்.
1oq67c5

Make and serve these delightful sugar-free faldhari barfis this festive season for the goodness of nuts.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -