- Advertisement -
Home Lifestyle பளபளன்னு மின்னும், ஊட்டமான சருமம் வேணுமா..? இந்த கற்றாழை ஜூஸை குடிங்க..!

பளபளன்னு மின்னும், ஊட்டமான சருமம் வேணுமா..? இந்த கற்றாழை ஜூஸை குடிங்க..!

- Advertisement -

உங்கள் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழந்ததற்கு, மாசு, நீங்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் அல்லது வேலையில் உள்ள மன அழுத்தம் போன்றவற்றைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்கு இப்போதும் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், அது இன்னும் ஆரோகியத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். தினசரி அடிப்படையில் வெளிப்படும் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அடிக்கடி நமது சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் இன்னும் ஆழமாக தோண்டி உங்கள் உணவை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். பல சந்தர்ப்பங்களில், நம் உணவில் சருமத்தை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் இருக்க வைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.

நீங்கள் இயற்கை சிகிச்சையைத் தேடுகிறீர்களானால், நீங்கள் கற்றாழையை முயற்சி செய்யலாம். இந்தியில் கிருத்குமாரி என்றும் அழைக்கப்படும் கற்றாழை என்பது ஒரு அழகுபடுத்தும் தாவரமாகும், இது முழு அழகுத்துறையின்கற்பனையையும்கவர்ந்துள்ளது. இது உங்கள் கிரீம்கள், ஃபேஸ் வாஷ், சோப்புகள் என எல்லவற்றிலும் உள்ளது.

சருமத்திற்கு கற்றாழை தரும்நன்மைகள்:

கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. ஆக்ஸிஜனேற்றங்கள் மந்தமான தோல் மற்றும் சுருக்கங்களுக்கு காரணமான free radical activity-ஐ தடுக்க உதவுகின்றன. டி.கே. பப்ளிஷிங் ஹவுஸின் ‘ஹீலிங் ஃபுட்ஸ்’ புத்தகத்தின்படி, கற்றாழை “பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி, ஈ மற்றும் பல பி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின்” ஒரு நல்ல மூலமாகும். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ இரண்டும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், கதிரியக்கமாகவும் வைத்திருக்க மிகவும் முக்கியம். ஆயுர்வேதத்தில், முகப்பரு அல்லது தீக்காயங்களை குணப்படுத்த கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.

eq4ccjk

கற்றாழை (Aloe Vera) ஜெல்லை மட்டும் எடுக்கலாம் அல்லது தோலுடனும் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி இருந்தால், உங்கள் சமையலறையிலும் பயன்படுத்தலாம். கற்றாழை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அதை ஜூஸ் செய்வது. நீங்கள் முயற்சிக்க ஒரு எளிய செய்முறை இங்கே.

ஒரு நடுத்தர அளவிலான கற்றாழை இலையை பறித்து விடுங்கள். அதை துண்டு துண்டாக வெட்டுங்கள். மேல் தோலை உரித்து, ஒரு பாத்திரத்தில் தெளிவான ஜெல்லை வெளியேற்றவும். இப்போது மிக்ஸியில் அந்த ஜெல்லுடன், சில ஆப்பிள் அல்லது அன்னாசி பழச்சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை ஃப்ரெஷாக உடேனே உட்கொள்ளுங்கள். சிறந்த முடிவுகளுக்கு இந்த ஜூஸை தவறாமல் தொடர்ந்து குடிக்கவும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here