- Advertisement -
Home Technology பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!!

பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!!

- Advertisement -

இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்படுமா என்ற பரபரப்பு ஒருபுறம் ஏற்பட்டிருந்தாலும், பப்ஜி கேமோ சத்தமில்லாமல் தனது அப்டேட்டை செய்து வருகிறது. தற்போது, 1.0 அப்டேட்டுடன் Erangel 2.0 வரைபடம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பப்ஜி மொபைல் குழு தரப்பில், டிஸ்கார்ட் சேவையகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், எராங்கிள் 2.0 மேப் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும் வெளியிடப்பட்டது. 1.0 அப்டேட் தற்போதைக்கு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. iOS பதிப்பில் விரைவில் வெளியாகிறது.

பப்ஜியின் இந்த புதிய பதிப்பில் பல மாற்றங்கள் உள்ளன, அவற்றில் குறிப்பிடத்தக்கதும், மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும் எராங்கல் 2.0 வரைபடமாகும். இது பீட்டா அப்டேட் என்பதால், சாதாரண மொபைல் ஆப்பில் வரும் போது இன்னும் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PUBG மொபைல் பீட்டா 1.0 அப்டேட்
PUBG மொபைலுக்கான பீட்டா 1.0 அப்டேட் என்பது பப்ஜி பிரியர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் இது 0.19.0 வெர்ஷனுக்குப் பிறகு 0.20.0 வராமல், நேரடியாக 1.0.0 அப்டேட்டுக்கு வந்துள்ளது. நேரடியாக புதிய எராங்கல் 2.0 வரைபடத்தைக் கொண்டுவந்துள்ளது.

அண்மையில் வந்த லிவிக் மேப் மற்றும் இதற்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட மேட் மிராமர் மேப் ஆகியவற்றைப் போல், சில அழகியல் மாற்றங்களைக் கொண்டுள்ளது. மைல்டா பவர், குவாரி, சிறைச்சாலை மற்றும் பிற பகுதிகளில் சில மாற்றங்கள் உள்ளன. வரைபடத்தில் அகழிகள், கைவிடப்பட்ட தொட்டிகள், தடுப்புகள் இன்னும் பிற விஷயங்களையும் புதிய அப்டேட்டில் பார்க்க முடிகிறது.

மேலும்,  சில பக்குகள் சரி செய்யப்பட்டு, M1014 என்ற புதிய ஆயுதமும் கொண்டு வரப்பட்டுள்ளது. சியர் பார்க் ஷோடவுன்கள் மற்றும் பலவற்றோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பீட்டா பதிப்பை ஆண்ட்ராய்டு பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். iOS பயனர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில், ஒரு வேளை அப்டேட் லிங்க் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், சிறிது நேரம் கழித்து முயற்சி செய்து பார்க்கவும்.  பீட்டா 1.0 அப்டேட் செய்யும் பப்ஜி கேமர்கள்  டிஸ்கார்ட் சர்வரில் உள்ள குழுவுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பப்ஜி அப்டேட்டின் மொத்த மெமரி 1.52 ஜிபி  ஆகும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here