- Advertisement -
Home Technology புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!

புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!

- Advertisement -

வாட்ஸ்அப்பில் புதிதாக செர்ச் ஆப்ஷன், மெசேஜ் எக்ஸ்பைரி உள்ளிட்ட அம்சங்கள் வரவுள்ளன. இது என்ன அம்சங்கள், எப்போது வரும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

download 2வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாற்றங்கள் வசதிக்காகவும், பயனர்களுக்கு பயனுள்ள வகையிலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த அப்டேட்டுகள் நமது வாட்ஸ்அப்பில் வருவதற்கு முன்பாக பீட்டா வெர்ஷனில் பரிசோதிக்கப்படும். அதன் பிறகே பயனர்களுக்கு கிடைக்கும்.

இந்த நிலையில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இரண்டு புதிய அப்டேட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனைக் கண்காணித்து வரும் WABetaInfo என்ற தளம் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் செர்ச் ஆப்ஷன் மற்றும் எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள் காணப்பட்டுள்ளன. இது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் v2.20.197.10 இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு v2.20.197.7 வெளியானது. இந்த இரண்டு அப்டேட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். வெகு சில பயனாளர்களால் மட்டுமே வித்தியாசத்தைப் பார்த்து புதிய அப்டேட்டை அடையாளம் காண முடியும்.

whatsapp expiring messages wabetainfo WhatsApp

வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அம்சங்கள்
Photo Credit: WABetaInfo

வாட்ஸ்அப்பில் இதுவரையில செர்ச் ஆப்ஷன் என்பது பொதுவாகவே இருந்து வந்தது. அதாவது ஒரு வார்த்தையை செர்ச் செய்தால், அந்தக் குறிப்பிட்ட வார்த்தையைக் கொண்ட அனைத்து டெக்ஸ்ட் மெசேஜ்கள், டாக்குமென்ட், புகைப்படம், ஆடியோ பைல் என  எல்லாம் வந்துவிடும்.

ஆனால், புதிய அப்டேட்டில் ஒவ்வொன்றும் தனித்தனி ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டுள்ளன. செர்ச் ஐக்கானை டச் செய்தால், அதன் அருகில் டாக்குமென்ட், புகைப்படம், ஆடியோ பைல் ஆகியவற்றுக்கான பட்டன்களும் தோன்றும். நமக்கு எந்த ஆப்ஷனில் தேட வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதே போல், மெசேஜ் எக்ஸ்பைரி மூலம் ஒரு மெசேஜ்க்கான கால நேரத்தை நீங்களே செட் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு மெசேஜை அனுப்புகிறீர்கள், அது ஒருவாரம் மட்டுமே இருக்க வேண்டும், அதன் பிறகு அழிந்து விட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு ஏற்ப எக்ஸ்பைரி காலத்தை செட் செய்துவிட்டு அனுப்பலாம்.  இந்தப் புதிய வசதிகள் ஏற்கனவே ஜிமெயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here