HomeInternationalரஷ்யாவில் ஆற்றில் சிக்கிய மாணவரை காப்பாற்ற முயன்ற 4 தமிழக மாணவர்கள் பலி!!

ரஷ்யாவில் ஆற்றில் சிக்கிய மாணவரை காப்பாற்ற முயன்ற 4 தமிழக மாணவர்கள் பலி!!

ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த சென்னை, கடலூர், சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் அங்குள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்த்த ராமு என்பவரின் மகன் விக்னேஷ்(வயது 23) ரஷ்ய நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் ஓல்கா ஆற்றுக்கு விக்னேஷ் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது இவர்களுடன் சென்ற நண்பர் எதிர்பாராத விதமாக நதியில் சிக்கிக் கொண்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற விக்னேஷ் உட்பட மேலும் மூன்று பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்த்த விக்னேஷ் குடும்பத்தினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

விக்னேஷின் சகோதரர் நிஷாந்த் கூறுகையில், “வோல்கோகிரேட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Volgograd State Medical University) எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். அவர்கள் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அருகே ஓல்கா என்ற ஆறு இருக்கிறது. அந்த ஆற்றுக்கு விக்னேஷ் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது இவர்களுடன் இருந்த மாணவர் ஒருவர் ஆற்றில் இறங்கியபோது அவர் நீரில் சிக்கிக்கொண்டார்.

113873694 4f89ba35 c607 493e be2c 0e77b843c501இதையடுத்து அவரை காப்பாற்ற விக்னேஷ் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். ஆனால் ஆற்றில் மூழ்கிய நபரை காப்பாற்றும் முயற்சியில் அனைவரும் நீரில் சிக்கிக்கொண்டனர். மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த மற்ற மாணவர்கள், இவர்களைக் காப்பாற்றச் சென்றால் ஆற்றில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் உள்ளே இறங்கவில்லை. பிறகு சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்றார் நிஷாந்த்.

BBC

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -