- Advertisement -
Home Lifestyle லெமன் டீ தெரியும், ஃபுரூட் டீ தெரியுமா? 5 நிமிடத்தில் செய்யலாம்!

லெமன் டீ தெரியும், ஃபுரூட் டீ தெரியுமா? 5 நிமிடத்தில் செய்யலாம்!

- Advertisement -

தேநீர் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். காலை எழுந்தவுடன் புத்துணர்ச்சி பெறுவதற்கு டீ குடிக்கிறோம். வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில், களைப்பாக இருக்கும் போதும் தேநீர் குடிக்கிறோம்.

இவ்வாறு நம்மை புத்துணர்ச்சியூட்டும் தேநீரில் பலவகைகள் உள்ளன. பிளாக் டீ, நார்மல் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, கிரீன் டீ, மூலிகை டீ என பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இது எடை குறைப்புக்கு, செரிமானக் கோளாறு ஆகியவற்றுக்கும் ஏற்றவாறு தயார் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் சாதாரண பால் டீ விரும்புகிறார்கள். இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக கிரீன் டீ குடிப்பார்கள்.

இத்தகைய தேநீர் வரிசையில் பரவலாகி வருவதுதான் ஃபுரூட் டீ. தேயிலைக்குப் பதிலாக பழங்களால் ஆன தேநீர். அண்மைக்காலமாக இந்த வகை டீ பிரபலமாகி வருகிறது.

இதில் தேயிலைகள் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக மசாலா மற்றும் மூலிகைகள் சேர்த்து, சில பழங்களையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து தயார் செய்யப்படுகிறது.

பழங்களிலுள்ள வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அப்படியே தண்ணீரில் நீர்த்து எடுக்கப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. மேலும், பழங்களின் சுவையும், இனிப்பும் புத்துணர்ச்சியாக்குகின்றன.

vh8a392g

சுவையான ஃபுரூட் டீ

மழைக்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற ஒரு பானம் ஃபுரூட் டீ ஆகும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்றவைகளை குணப்படுத்த ஃபுரூட் டீ உதவுகிறது. இதில் எந்தவிதமான தேயிலையும், காஃபினும் கிடையாது. ஃபிரஷான ஆரஞ்சு பழங்கள், பெர்ரி பழங்களை துண்டுகளாக்கி, அத்துடன் இஞ்சி, புதினா இலை ஆகியவை சேர்க்க வேண்டும். பின்னர், இவையனைத்தையும் கொதிக்க வைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் போதும். ஃபுரூட் டீ ரெடி.

ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேநீரில் இஞ்சியின்  இனிமையான மண் சுவையும் உள்ளது. ஒட்டு மொத்தமாக ஃபுரூட் டீ என்பது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அற்புதமான பானமாகும். நீங்களும் செய்து பாருங்களேன்!

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here