HomeSrilanka26 ஆண்டுகளுக்கு பிறகு கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க!!

26 ஆண்டுகளுக்கு பிறகு கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது.

தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

மேலும், நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. தேசிய பட்டியலின் ஊடாக ஒருவர் மட்டுமே தேர்வாகியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க – என்ன காரணம்?113874301 84d53bb7 2d98 4d14 9b96 46555f1e6a13ரணில் விக்ரமசிங்கவின் உள்கட்சி அதிருப்தியாளர்கள் ஆக இருந்தவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் வேறொரு கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஒரு குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

இவ்வாறு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, இந்த முறைத் தேர்தலின் ஊடாக 54 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக இன்று தீர்மானித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -