- Advertisement -
Home Technology சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு; Cash back offer அறிவிப்பு!!

சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு; Cash back offer அறிவிப்பு!!

- Advertisement -

சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்ததையடுத்து, ஸ்மார்ட்போன்களுக்கான விலை ஏகிறியது. சாம்சங், ரெட்மி, ஒப்போ, விவோ, ஆப்பிள் என அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

அந்த வகையில், சாம்சங்கின் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் 23,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், ஜிஎஸ்டி விலை உயர்வுக்குப் பிறகு இதன் விலை 25,250 ரூபாயாக உயர்ந்தது.

இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலை ஜிஎஸ்டி.,க்கு முன்பிருந்த விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 25,250 ரூபாயிலிருந்து 23,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல், 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை 27,999 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 25,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், HSBC மற்றும் SI வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் கூடுதலாக கேஷ் பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் மட்டுமே ்அமலில் இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி A51 சிறப்பம்சங்கள்:
திரை அளவு: 6.5 இன்ச்
டிஸ்பிளே சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC
ஸ்டோரேஜ்: 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி

கேமரா:
பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் (குவாட்) உள்ளன. அவை 48MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 5MP டெப்த் கேமரா. இதே போல் முன்பக்கத்தில்,32 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்பம்ங்கள்:
4,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜர், 4ஜி நெட்வொர்க், வைஃபை, ஜிபிஎஸ், USB டைப் சி போர்ட், இன் டிஸ்பிளே விரல் ரேகை சென்சார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. ‘ஸ்பார்க் எயார்’...

ஒருவர் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது!

ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க...

பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி…!!

இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

கொரோனாவினால் பலியானோர் 10 இலட்சம் பாதிப்புக்குள்ளானோர் தொகை மூன்று கோடி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here