- Advertisement -
Home International இங்கிலாந்தில் காட்டுத் தீ!!

இங்கிலாந்தில் காட்டுத் தீ!!

- Advertisement -

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் சோபம் காமனில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

140 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை உள்ளடக்கிய பகுதியில் காட்டுத்தீயால் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 100 குடியிருப்பாளர்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டனர். அத்துடன் காற்றில் புகை கலந்துள்ளதால் குறித்த பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை சோபாம் காமனில் இருந்து ஒரு பெரிய புகை மண்டலம் எழுந்ததையடுத்த பல தீயணைப்புக் குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த மக்களை சனிக்கிழமை மாலை தமது வீடுகளை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டது.

தீயணைப்பு பணியில் 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த காட்டுத் தீ வென்ட்வொர்த் கோல்ப் மைதானத்திற்கும் பரவியுள்ளது. தீ விபத்துக்குப் பின்னர் ரோஸ் லேடீஸ் சீரிஸ் கோல்ப் போட்டியின் இறுதிப் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக இப்பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தீக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ஆனால் தீவிர வெப்பநிலை தொடர்ந்து வருவதால், தீ மூட்டி எரித்தல் அல்லது கிராமப்புறங்களில் உணவுகளை தீயில் சுடுதல் ( BBQ ) போன்ற தேவையற்ற தீகளை ஏற்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது31757112 8610407 image a 104 1597018934479

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here