- Advertisement -
Home Srilanka இணையா விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் அழைப்பு!!

இணையா விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் அழைப்பு!!

- Advertisement -

தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணையாது விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி கோத்தபாய அரசு மிகவும் பலம் அடைந்துள்ளது.தமிழ் மக்கள் தற்போது கடும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நாம் ஒன்றிணையாது விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக மனப்பூர்வமாக செயற்பட வேண்டும்.வார்த்தைகளால் மட்டும் அல்லாது மனபூர்வமாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் எமது கட்சியுடன் இணையுங்கள் என்று கூறவில்லை.மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன்.

இது நடைபெற வேண்டும் வெறுமனே மக்களுக்கு நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here