- Advertisement -
Home Srilanka இலங்கை – மியான்மாருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!!

இலங்கை – மியான்மாருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!!

- Advertisement -

இலங்கை – மியான்மார் நாடுகளக்கு இடையில் நேரடி விமான சேவையை ஏற்படுத்துவது குறித்து மியான்மர் எயர்வேஸ் இன்டர்நேஷனலின் உயர் நிர்வாகத்துடன் மியான்மாருக்கான இலங்கையின் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கும், மியான்மாருக்கும் இடையில் நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான நோக்கத்துடன் மியான்மருக்கான இலங்கை தூதுவர் நலின் டி சில்வா மியான்மர் எயர்வேஸ் இன்டர்நேஷனலின் உயர் நிர்வாகத்துடன் அண்மையில் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.

இதன்மூலம் இரு இடங்களிலும் சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்த முடியுமெனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளின் நேர விரயத்தை குறைக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வரலாற்று, கலாச்சார மற்றும் மத உறவுகளால் ஆதரிக்கப்படும் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் கணிசமான அளவு போக்குவரத்துச் சேவை இதனால் நடைபெறுமென மியான்மாருக்கான இலங்கையின் தூதுவர் இதன்போது கூறியுள்ளார்.

இரு நாடுகளின் மத முக்கியத்துவத்திலிருந்து பொருளாதார நன்மைகளைப் பெறும் நோக்கில் கொழும்பு – யங்கூன் – புத்தகாயா அல்லது கொழும்பு – யங்கூன் – காத்மண்டு ஆகியவற்றை இணைக்ககூடிய ஒரு விமான சேவையை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவிருப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் மியான்மர் எயர்வேஸ் இன்டர்நேஷனலை பிரதிநிதித்துவப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் ராமசாமி மற்றும் தலைமை வணிக அதிகாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here