- Advertisement -
Home International உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா!!

உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா!!

- Advertisement -

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார்.

மகளுக்கு பரிசோதனை

தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறும் புதின், பெரும் அளவில் இந்த தடுப்பு மருந்து விரைவில் உற்பத்தி செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.113887654 fdc50757 55a0 4662 9929 152267ca9cc8

அச்சம் தெரிவிக்கும் மேற்குலகம்

தடுப்பு மருந்து தயாரிப்பதில் ரஷ்யாவின் வேகத்திற்கு மேற்குலக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே ஆய்வாளர்கள் சில நடைமுறைகளைப் புறந்தள்ளி இவ்வளவு வேகம் காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று முன்னதாக ரஷ்யா தெரிவித்து இருந்தது.

முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ கூறியதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்து இருந்தது.

உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.

ரஷ்யாவில் இதுவரை 890,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 14973 பேர் பலியாகி உள்ளனர்.

BBC

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. ‘ஸ்பார்க் எயார்’...

ஒருவர் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது!

ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க...

பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி…!!

இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

கொரோனாவினால் பலியானோர் 10 இலட்சம் பாதிப்புக்குள்ளானோர் தொகை மூன்று கோடி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here