- Advertisement -
Home India கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர்...

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் பலி!!

- Advertisement -

இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மண்சரிவில் சிக்கிய 6 மாத பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் கயத்தாறு, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

பெட்டிமுடி மலையில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

குறித்த நிலச்சரிவு சம்பவத்தில் 20 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் நித்திரையில் இருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் மாண்டனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், பொலிசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 12 பேரை உயிருடன் மீட்டனர்.

மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 2 ஆவது நாளாக நேற்று முன்தினம் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து கொட்டும் மழையில், 3 ஆவது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. இதில் 16 சடலங்கள் மீட்கப்பட்டடன.

பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 19 பேர், மாணவர்கள் என தெரியவந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here