- Advertisement -
Home India லெபனானுக்கு உதவி செய்ய இந்தியா திட்டம்!!

லெபனானுக்கு உதவி செய்ய இந்தியா திட்டம்!!

- Advertisement -

லெபனான் அரசுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருடக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், “இது பயங்கரமான மனித சோகம். இந்தியா சார்பில் மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அனுப்பப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிவை கண்டு அதிர்ச்சியடையும் அதேவேளை இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் பலம் பெற பிரார்த்திக்கிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று லெபனான் நீதித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தகவல் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகியோர் தங்களின் பதவி விலகல் கடிதத்தை முறைப்படி பிரதமரிடம் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here