- Advertisement -
Home Srilanka 12 மாணவர்களை மோதிய கெப் வண்டி; குடிபோதையில் இருந்த சாரதி மீது கொலை குற்றச்சாட்டு!!

12 மாணவர்களை மோதிய கெப் வண்டி; குடிபோதையில் இருந்த சாரதி மீது கொலை குற்றச்சாட்டு!!

- Advertisement -

பொலன்னறுவை – அரலகங்வில பொலிஸ் பிரிவில், மேலதிக வகுப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது, கெப் ரக வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில், கெப் வண்டியை செலுத்திய வாகன சாரதிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 மாணவர்கள் காயமடைந்த நிலையில், ஒருவரை கொலை செய்தமை, 11 பேரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் பொலன்னறுவை நீதிமன்றில் இன்று அரலகங்வில பொலிஸார், பொலிஸ் சட்டப் பிரிவு மற்றும் சட்ட மா அதிபரின் அலோசனைக்கு அமைய அறிக்கை தாக்கல் செய்ததாக பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விடயங்களை முன்வைக்கும் போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தார். அதன்படி குறித்த கெப் வண்டி சாரதிக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ நேற்று முன் தினம் பிற்பகல் 3.20 மணியளவில் இந்த கோர சம்பவம் பதிவாகியிருந்தது. ( விபத்தின் சி.சி.ரி.வி. காட்சிகளை ஊடகங்களுக்கு காண்பித்த நிலையில் விடயத்தை தொடர்ந்தார்.)

அரல கங்வில பொலிஸ் பிரிவின் போகஸ் சந்தி பகுதியை அண்மித்த இடத்தில், தெஹி அத்த கண்டிய பகுதியிலிருந்து அரலகங்வில பகுதியை நோக்கி வேகமாக பயணித்துள்ள கெப் வண்டியொன்று, அங்கு பகுதி நேர வகுப்பு முடிந்து சென்றுகொண்டிருந்த மாணவர்களை மோதியுள்ளது. பாதையை விட்டு விலகி வந்த கெப் மாணவர்கள் மீது மோதுவது சி.சி.ரி.வி.காணொளிகள் ஊடாக தெளிவாகின்றது.

இதன்போது அங்கிருந்த 14 முதல் 16 வயது வரையிலான 2 மாணவர்களை அந்த கெப் வண்டி மோதியுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய 11 பேரில் 4 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் 7 பேர் அரலகங்வில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 வயதுடைய ரன்மல்தென்ன பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டியின் சாரதியை அரலகங்வில பொலிசார் கைது செய்தனர். அவரை உடனடி குடிபோதை தொடர்பிலான பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் பின்னர் அரலகங்வில வைத்தியசாலையிலும் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கும் உட்படுத்தினர். இதன்போது சாரதி குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளினதும் ஆலோசனையினைப் பெற்று குறித்த சாரதிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்துவதற்கான ஆலோசனைகளை பொலிஸ் சட்டப் பிரிவிவு அரலகங்வில பொலிஸாருக்கு வழங்கியுள்ளது. ‘ என்றார்.

அண்மையில் இலங்கையில் பதிவான விபத்துக்களில் 3 சம்பவங்கள் தொடர்பில் சாரதிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மாத்தறை – கிரிந்த பகுதியில் பொலிஸார் ஒருவரை மோதிய ட்ரக் வண்டி சாரதிக்கும், நுகேகொடை மேன் பாலத்தில் இரானுவ கெப் வகனத்தை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய தனியார் பஸ் வண்டி சாரதிக்கும், நேற்று அரலகங்விலவில் 12 மாணவர்களை மோதிய கெப் சாரதிக்கும் எதிராகவே இவ்வாறு கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று கொலை, கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவை மேலதிக நீதிவான் முன்னிலையில் குறித்த சாரதி ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here