- Advertisement -
Home Srilanka 18 மான் கொம்புகள், 2 காட்டெருமை கொம்புகளுடன் நுவரெலியாவில் முகாமையாளர் கைது!!

18 மான் கொம்புகள், 2 காட்டெருமை கொம்புகளுடன் நுவரெலியாவில் முகாமையாளர் கைது!!

- Advertisement -

நுவரெலியா பொலிஸாரும், நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போது மிருகங்களின் உடற்பாகங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று (11.08.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா அன்ட பேங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் உல்லாச விடுதி ஒன்றில் மான் கொம்பு 18, பாம்பு தோல் ஒன்று, 15 பதப்படுத்தப்பட்ட வண்ணாத்து பூச்சிகள் அடங்கிய பெட்டிகள், இரண்டு காட்டெருமை கொம்புகள் ஆகியவை இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த உல்லாச விடுதியின் முகாமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்டங்களுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விஜேசேகரவின் உத்தரவின் பேரில் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி வீரசிரி பொலிஸ் உத்தியோகஸ்தர்களான பிரியங்கர (66427) திமன்த (81604) தேசப்பிரிய (56545) ஆகியோரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here