Home Srilanka சேருவில – கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் வானொன்று மோதி விபத்து!!

சேருவில – கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் வானொன்று மோதி விபத்து!!

சேருவில – கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானின் சாரதி படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் படுகாயமடைந்த நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அக்போபுர பகுதியைச் சேர்ந்த நாலக்க (வயது 39) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்துடன் சேருவில பகுதிக்குச் சென்ற வான் மோதிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -