Home Srilanka கிழக்கின் தவிர்க்க முடியாத பெரும் ஆளுமை; மக்கள் விரும்பும் சேவகன்!!

கிழக்கின் தவிர்க்க முடியாத பெரும் ஆளுமை; மக்கள் விரும்பும் சேவகன்!!

கீழே வரப்போகும் பல உண்மைகள் தேசியம் பேசுவோருக்கும் விடுதலைப் புலிகளின் தியாகத்தினை கொச்சைப் படுத்தி அரசியல் இலாபம் தேடும் பல அரசியல்வாதிகளுக்கும் அவர்களது தொண்டர்களுக்கும் கடும் கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் யதார்த்தத்தினையும் ஒட்டு மொத்த சர்வதேசத்தின் கண்ணோட்டத்தையும் ஒருங்கே அவதானிக்கும் நடுநிலைவாதிகள் மற்றும் தேசம் தேசியத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு அபிவிருத்தியினை எட்டிட முடியாமல் தத்தளிக்கும் இக்கால சூழலில் அதனை நேருக்கு நேர் அன்றாடம் எதிர் கொள்ளும் மக்களின் ஏக குரலாக நான் இக் கட்டுரையினை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

ஒரு நபரின் அரசியல் பிரவேசம் பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் பல விமர்சனங்களுக்கு மத்தியிலுமே நிகழ்கிறது; அன்று விமர்சித்தவர்கள் இன்று அந்த நபரின் சேவையினை கண்டு ஆதரவளிப்பது என்பது மறுக்க இயலாத நிதர்சனம்.

காலத்தின் கோரத்தால் ஒருவர் ஆயுதமேந்தி போராட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் காலப் போக்கில் தான் எதற்காக ஆயுதமேந்தினேன் எனும் இலட்சியம் நெறி தவறும் போது வேதனையடைந்து அப்பேற்பட்ட போராட்டத்தினை புறந்தள்ளி விட்டு சமூக வாழ்விற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் இருப்பை பாதுகாத்து கொண்டும் தன் சார்ந்த இனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட ஒருவர் எத்தனிக்கும் போது தேசியம் பேசிக் கொண்டு வாழும் பலர் அவரை எதிர்ப்பது வேடிக்கை கலந்த வேதனை தரும் செயல் ஆகும்.

ஆனால் இவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு உட்புக எத்தனிக்கும் போது அவரின் கரங்களுக்கு விலங்கிட்டு சிறையில் தள்ளி அபிருத்தி எனும் தேசிய உரிமைகளில் ஒரு பெரும் பாகத்தினை வேடிக்கை பார்க்கிறது தேசியம்.pillaiyan

தேசியம் என்றால் என்ன? என்று உணராதவர்களின் சூழ்ச்சியே அன்றி அதில் தேசிய கோட்பாடு அறவே இல்லையென்றுதான் கூற முடியும்; உண்மை தேசியவாதிகள் ஒரு போதும் தன் இனத்தின் அபிவிருத்திக்கும் வளமான வாழ்விற்கும் தடையேற்படுத்த முனைய மாட்டார்கள் மாறாக தட்டிக் கொடுத்து தன் சார் வகிபாகத்தினையும் மறைமுகமாக வழங்குவார்கள் இதற்கு உதாரணம் இன்றைய மஹிந்த குடும்பத்தின் நல்லாட்சி என்றே உறுதிபடக் கூறிக் கொள்கிறேன்.

அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் இன அழிப்பு யூலைக் கலவரம் பற்றியும் ஆசியாவின் முத்து எனப்படும் யாழ் நூலக எரிப்பு என்பனவற்றை அன்றைய நாட்களில் அனுபவித்த எவரும் அந்த அரசாங்கத்தினை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறை அவர்களை ஏற்றுக் கொண்டது காரணம் பிரேமதாசா ஆட்சியில் பல நற் திட்டங்கள் உணவு முத்திரை பாடசாலை சீருடை என பல வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் போது அந்த அரசு செய்த கொடுஞ் செயல்கள் தமிழர்கள் மனதிலிருந்து மறைந்து போய் விட்டதென்றே கணிக்க முடிக்கிறது.

அதன் பின்னர் சந்திரிக்காவின் ஆட்சி விமர்சனத்திற்கு உள்ளானது அதை வெறுத்த மக்கள் ஐக்கிய தேசிய கட்சியினை பீடமேற்றினார்கள் ஆனால் அவர்கள் ஒப்பந்தம் பேச்சுவார்த்தை என்று தமிழ் அரசியல்தலைவர்களை தமது கைக்கூலியாக்கி தமிழ் மக்களின் தேசிய கோட்பாடும் அடித்து அணைக்கப்பட்டு அபிவிருத்தியும் முடக்கப்பட்டு முற்று முழுதாக விடுதலைப் போராட்டம் மாபெரும் இராஜ தந்திர சூழ்ச்சியினால் செயல் இழக்க செய்யப்பட்டு விட்டது அதன் பின்னர் மஹிந்த அரசு அரியணையை கைப்பற்றி பலமிழந்து போன விடுதலைப் போராட்டத்தினை சில மாதங்களில் தாம் வென்று விட்டதாக கூறி செத்துப் போன பாம்பினை அடித்து விட்டு மார் தட்டியது என்ற உண்மை அறியாத மக்கள் மீண்டும் தமிழ் தேசியவாதிகள் எனும் பெரும்  பேச்சினிலே வசப்பட்டு தேசியம் என்பவர்களது பேச்சினிலே உசுப்பேற்றப்பட்டு மீண்டும் ஐக்கியதேசியக்கட்சியின் பக்கம் மக்கள் திசை திருப்பப் பட்டார்கள் ஆனால் அந்த திட்டம் தோல்வியிலேயே முடிந்தது.

ஆனாலும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் ஒற்றுமையினால் தனி சிங்களவர்களின் வாக்கினை மாத்திரம் பெற்றுக் கொண்டு கோட்டாபய  ராஜபக்ச ஐனாதிபதியானார்; ஆனாலும் தம் சுய கௌரவத்திற்காகவும் சுய தேவைக்காகவும் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அத்தனை தமிழ் தேசியவாதிகளும் எதிர்ப்பு அரசியல் எனும் போர்வைக்குள் தங்களை மறைத்துக் கொண்டு பசுந்தோல் போர்த்திக் கொண்டு தீயவர்களோடு தமது மக்களின் தேசியத்தினை குழிதோண்டி புதைக்க முற்பட்டார்கள் ஆனால் தேசியத்தினை ஒரு கையிலும் அபிவிருத்தியினை மறு கையிலும் தாங்கிக் கொண்டு புறப்பட்ட ஒரே யொருவர் சூழ்ச்சிகளினால் சிறையில் தள்ளப்பட்டார் என்பதே உண்மை வரலாறு.

எத்தனை ஆய்வாளர்கள் அரசியல் மேதைகள் சட்ட வல்லுனர்கள் இங்கே கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்தாலும் இந்த புடம் போட்ட உண்மையினை அவர்களது மனச்சாட்சி உணர்ந்து விடும் ஆனாலும் உண்மையைக் கூறினால் எங்கே தமது இருப்பு கைமாறி விடுமோ என்ற அச்சம் அவர்களை இவ் உண்மையினை உரக்க பேச விடாமல் தடுத்து விடும்.

இலங்கை அரசியலில் இறைவன் புகுந்து விட்டார் இனி முழு உலகுக்குமே முன்மாதிரியாக இந்த சிறு இலங்கைத் தீவு இருக்கப் போகிறது என்பதே எனது எதிர்வு கூறல் காலம் கடந்தாலும் எனது இக் கணிப்பானது நிகழ்ந்தே தீரும் ஏனெனில் இந்தியாவில் நிகழ்ந்த மகாபாரதம் போல் பல மகா பாரதங்கள் இணைந்த வரலாறு இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது எத்தனை சூழ்ச்சிகள் எத்தனை சகுனிகள் எத்தனை துரியோதனன்கள் எத்தனை பீஷ்மர்கள் எத்தனை துரோணர்கள் எத்தனை அசுவத்தாமன்கள் எத்தனை சஞ்சயன்கள் எத்தனை விதுரர்கள் எத்தனை துச்சாதனன்கள் எத்தனை கர்ணன்கள் எத்தனை துரௌபதைகள் எத்தனை குந்தி தேவிகள் எத்தனை அரிச்சுனன்கள் எத்தனை தர்மர்கள் எத்தனை பீமர்கள் எத்தனை நகுல சகாதேவர்கள்  என அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் ஒரே கண்ணன்தான் அவனே நீதி அவனே தர்மம் அவனே உயிர்;  இங்கே நான் ஒரு விதுரனாக நீதியை மாத்திரமே கூறுகிறேன் எவரின் தனிப்பட்ட வாழ்வினையோ அவர்கள் வாழ்க்கை முறையினையோ விமர்சிக்கவில்லை ஒரு எடைத் தராசின்  முள்ளாகவே நான் நிற்கிறேன் எவரின் தவறுகளையும் நான் நியாயப்படுத்தவில்லை அவர்களின் அறியமையினையே சுட்டிக்காட்டுகிறேன்.

இங்கே தர்மம் மாத்திரமே ஜெயிக்கும் தர்மம் நிலைநாட்டப்படும் போது நீதி உயிர் பெறும் மறுக்கப்பட்ட நீதிகள் ஏற்கப்படும் அதன் முதற் கட்டமே சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் அவர்களின் விடுதலை; அவரது பெயரிலே எதிர்காலத்தில் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கும் பல பொருள் கூறும் ஒரு சொல் தெரிகிறது.Sivanesathurai Chandrakanthan

முதலில் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டு அதனூடாக தன் சார்ந்த சமூகத்தின் இருப்பினை தக்க வைக்க எவர் ஒருவர் முன் நிற்கிறாரோ அவரே அந்த சமூகத்தின் காவலன் மாறாக தன் சார்ந்த சுகபோகங்களை நிலை நிறுத்த பாடுபடுபவர்கள் அந்த சமூகத்தின் காலன்கள் என்கிறேன்.

சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு வெற்றி அது சிறைச்சாலை அல்ல அவருக்கு அறத்தினை போதித்த அறச்சாலை இதை அவரிடமே நேரில் கேட்டுப் பாருங்கள் இதனையே அவர் கூறுவார் சாமானிய மனிதர்களின் வாழ்வின் யதார்த்தத்தினை முழுமையாக உணரச் செய்யவே இறைவன் அவருக்கு வழங்கிய அருட்  கொடைதான் இந்த சோதனை அன்று மறுக்கப்பட்ட ஒருவர் இன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக மாறிவிட்டார் இங்கு தனி மனித மாற்றமே சமூக மாற்றமாகிறது என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டு.

இன்னுமின்னும் தமிழ் சமூகத்தை தேசியம் எனும் போர்வை கொண்டு போர்த்தி உணர்ச்சி அரசியல் செய்யும் தமிழ் தலைமைகள் எனக் கூறுபவர்கள் அதனை ஒரு பக்கம் வைத்து விட்டு யதார்த்த அரசியலை கையிலெடுங்கள் சமூகம் உங்களின் வசப்படும் அதே போல மக்கள் ஏற்றுக் கொண்ட அதுவும் 50% இற்கும் மேலான விருப்பு வாக்கினை சிறைச்சாலையில் இருக்கும் ஒருவருக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வழங்கிய மக்களை முட்டாளாக்க நீங்கள் எத்தனித்தால் விளைவுகள் உங்களுக்கெதிரான மாபெரும்  புரட்சியாகவும் மக்கள் போராட்டமாகவும் வெடித்து சர்வதேசத்தின் கண்களில் நீங்கள் செல்லாக்காசாகிப் போவீர்கள் என்பதனை இப்போதே என் மனவோட்டம் கட்டியம் கூறுகிறது.

இவ்வாறான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உங்கள் சுய கௌரவம் இழக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டு பிள்ளையான் எனும் ஆளுமை சிறை மீண்டு வருவதா அல்லது நீங்களாகவே உண்மை நிலையினை உணர்ந்து அவரை விடுவித்து மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து வாழ்வதா எனும் முடிவுகளை உங்கள் கரங்களிலேயே தற்போது மக்கள் தந்திருக்கிறார்கள் காலத்தையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு எதனையும் பிற் போடாமல் தகுந்த முடிவுகளை மக்கள் எடுக்கும் முன்னர் நீங்கள் எடுப்பது சாலச் சிறந்தது.

குருச்சேத்திர வரலாற்றை ஒரு தடவை படியுங்கள் ஏனெனில் நீங்கள் தமிழர்கள் தமிழ் தெரிந்தவர்கள் அப்போதுதான் அரசியலின் ஆளம் அறிவீர்கள் பீஷ்மர் வீழ்த்தப்படாது இருந்திருந்தால் நீதி தோற்றிருக்கும் அதர்மம் தலைவிரித்தாடியிருக்கும் ஆனால் பீஷ்மர் தர்மத்தை விரும்பியவர் அதனால் தர்மம் ஜெயித்தது அது போல யோசப் பரராஜ சிங்கம் எனும் மாமனிதர் வீழ்ந்தது தர்மம் ஜெயிப்பதற்காக இருக்கலாம் அவரை வீழ்த்தியவர் அரிச்சுனனாக இருக்கலாம்; இதற்கான பதில்கள் மக்களிடமே உள்ளது என்னிடமில்லை.download 4இப்படிக்கு
தர்மேந்திரா

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -