Home Srilanka மாட்டு பண்ணையொன்றுக்கு புல் கட்டுகளை ஏற்றி சென்ற பார ஊர்தி ஹட்டன் பகுதியில் தடம் புரண்டு...

மாட்டு பண்ணையொன்றுக்கு புல் கட்டுகளை ஏற்றி சென்ற பார ஊர்தி ஹட்டன் பகுதியில் தடம் புரண்டு விபத்து!!

மொனராகலையில் இருந்து வட்டவளை மாட்டு பண்ணையொன்றுக்கு புல் கட்டுகளை ஏற்றி சென்ற பார ஊர்தி ஒன்று ஹட்டன் நுவரெலியா குருக்கு வீதியில் தடம் புரண்டுள்ளது.

குறித்த பார ஊர்தியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை (13) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்டவளை நோக்கிய பயணித்துக்கொண்டிருந்த குறித்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -