Home Srilanka மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதந்த நிலையில் மீட்பு!!

மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதந்த நிலையில் மீட்பு!!

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாத்தியில் இன்று காலை சடலம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்த நிலையில், குறித்த நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதோடு, பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்படதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரின் பாதணி , உட்பட சில தடயப் பொருட்களையும், சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை.

மீட்கப்பட்ட சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற...
- Advertisement -

Related News

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற...

ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கும் ‘20’ – கோட்டாபயவிற்கு பறந்த ஓமல்பே சோபித தேரரின் கடிதம்!

20வது திருத்தசட்டம் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரிய நிலைக்குள்ளாக்கும் எனத் தெரிவித்து ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது தங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 20வது...

மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி!

பொரெல்ல குழந்தைகள் மருத்துவமனையில் 2 வயதும் 6 மாதமும் உடைய குழந்தை மற்றும் அவரது தாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் -19 பரவல் தடுப்பு செயல்பாட்டு மையம் இதை அறிவித்துள்ளது. குழந்தையும் தாயும்...

சிறையில் நலமுடன் இருக்கிறேன்- விரைவில் விடுதலை; சசிகலா கடிதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நலமுடன் உள்ளதாகவும் தனது விடுதலை குறித்து கர்நாடக...

தமிழ் றொக்கர்ஸ் இணையத்தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது?

திரைப்படங்களை சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்து வந்த முக்கிய இணையதளங்களில் ஒன்றான தமிழ் றொக்கேர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ் றொக்கேர்ஸ் என்று பெயர் இருந்தாலும், தமிழ், ஹிந்தி, கன்னடம்,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here