Home Srilanka எனது சுயவிபரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார்கள் - கலையரசன் தெரிவிப்பு

எனது சுயவிபரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார்கள் – கலையரசன் தெரிவிப்பு

பாராளுமன்ற செயலகம் தனது சுய விபரங்களை நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள தவராசா கலையரசன் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நான் சுமார் 16 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு பயணித்து வருகிறேன். அது எனது மூச்ச நிற்கும்வரை தொடரும். எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தாருங்கள் என இன்று வரை நான் யாரையும் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்ட்டது.

நான் சந்தோசப்பட்டேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக இம் மாதம் 8ஆம் திகதிய 2187/27 என்ற வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது எனக்கு கிடைத்தது.

அதற்குப் பின்னதாக மாவை சேனாதிராசாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சர்ச்சை உருவானது.

இவைகள் எதிலும் நான் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் ஒரு கருத்தை நான் கூறுகிறேன்.

அம்பாறை மாவட்டம் தமிழர்களுக்குரியது, அது தமிழ்ப் பிரதிநிதித்துவம் இன்றி இருத்தலாகாது. அந்த மாவட்டத்திற்கு அப்பாற்பட்டவரை நியமிப்பது தர்மமாகாது என தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -