- Advertisement -
Home Srilanka ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர்

ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர்

- Advertisement -

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்க இருக்கின்றார்.

பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்த பின்னர், அக்கிராசனத்தில் இருந்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

இதேவேளை, பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடும் என அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். ஆதனைத் தொடர்ந்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச்சத்தியம் செய்துகொள்வார்கள். பின்னர் சபாநாயகரால் பாராளுமன்றம் அன்றைய தினம் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் அடுத்த அமர்வுவரை ஒத்திவைக்கப்படும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப்...

உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா!!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என...

எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது உடல்...

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here