தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப் பட்ட வர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக நோய் தொற்று காரணமாக கடலூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி உள்பட 127 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 641ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 5 ஆயிரத்து 236 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் புதிய உச்சமாக ஆயிரத்து 179 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
திருவள்ளூரில் மேலும் 422 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 376 பேருக்கும், கடலூரில் 340 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.