Home Srilanka மணிவண்ணன் அவுட்! பகிரங்கமாக அறிவித்தார் கஜேந்திரகுமார்

மணிவண்ணன் அவுட்! பகிரங்கமாக அறிவித்தார் கஜேந்திரகுமார்

எமது இறுதி முடிவுகளை மணிவண்ணனுக்கு அறிவித்துவிட்டோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையுடன் பேசுவதற்கு தான் தயாராக உள்ளதாக கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறிய கூற்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மத்திய செயற்குழு கூடியே மணிவண்ணன் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டது.

அந்த முடிவுகளை நேற்று இரவு மணிவண்ணனுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்திருந்தோம்.

அதன் உத்தியோக பூர்வமான எழுத்துமூல பிரதியை பதிவு தபால் மூலமாக இன்று அனுப்பிவைக்கப்படும்.

இது தொடர்பில் மணிவண்ணன் தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பார் என்று நினைக்கின்றோம்.

அவருடைய நிலைப்பாட்டை தெரிவித்த பின்னர் கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -