- Advertisement -
Home Srilanka தவிசாளர் கலையரசன் இராஜினாமா!

தவிசாளர் கலையரசன் இராஜினாமா!

- Advertisement -

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சர்ச்சைக்கு மத்தியில் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச்செய்யவேண்டும் என்பதற்காக இராஜினாமாச்செய்துள்ளார்.
கடந்ததேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப்பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது.அதனால் த.தே.கூட்டமைப்பிற்குக்கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனத்தை பலத்த உட்கட்சிச் சர்ச்சைக்கு மத்தியில் கலையரசனுக்கு வழங்கியிருந்தமை தெரிந்ததே.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான கலையரசன் நாவின்வெளி பிரதேசசபைக்கு இடம்பெற்ற 2006 உள்ளுராட்சிதேர்தலில் போட்டியிட்டு உதவி தவிசாளராகத் தெரிவானார். பின்னர் 2008இல் தவிசாளரானார். மீண்டும் 2018 உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானார்.அப்தவியை தற்போது இராஜிமாச் செய்துள்ளார்.

கடந்த2015பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இ.த.அ.கட்சி சார்பில் போட்டியிட்ட க.கோடீஸ்வரன் 17799வாக்குகளைப்பெற்று தெரிவானார். அடுத்த அதிகூடிய 14723வாக்குகளைப்பெற்றவர் த.கலையரசன்.
இம்முறை த.அ.கட்சி எந்த ஆசனத்தையும் பெறவில்லை.ஆதலால் வேட்பாளர்களது விருப்புவாக்குகள் வெளியாகவில்லை. எனினும் உத்தியோகப்பற்றற்றதகவலின்படி அதிகூடிய விருப்பு வாக்குகளை இம்முறை த.கலையரசனே பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.எனினும் கட்சி போதிய வாக்குகளைப்பெறாமையினால் ஆசனம் இழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here