இலங்கை முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய பகுதிகளுக்கு வழமை நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் வடக்கு, வட மத்திய, ஊவா மாகாணத்தில் மின்சாரம் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கெரவலபிட்டிய உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
அதனை வழமைக்கு திருப்புவதற்கு பல கட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.