கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் உயர் மின் அழுத்தம் காரணமாகவே நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை போன்ற ஏனைய மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கினாலும் மின் இணைப்பு கட்டமைப்பில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக நாடு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை சீர் செய்யும் பணிகளில் மின்சார பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் இதனை செய்து முடிக்க சுமார் இரண்டு மணி நேரம் செலும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் மின் தடை ஏற்பட்டு இரு மணித்தியாலங்கள் கடந்துள்ள போதும் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்னமும் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.