- Advertisement -
Home International 2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று - மூடி மறைத்த சீனா - தற்போது 10...

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று – மூடி மறைத்த சீனா – தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து – அதிர்ச்சி ஆய்வு

- Advertisement -

கொரோனா பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சமீப காலமாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டில் சீனாவின் ஜுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வெளவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இறந்தனர். அது மட்டுமின்றி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், அது கொரோனா நோய்த்தொற்றின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கொரோனா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய அதில் உள்ள சான்றுகள் வழிவகுத்தன என குறிப்பிட்டுள்ளனர்.

2012-ல் நோய்த்தொற்றால் இறந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.

இந் நிலையில், தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடையதாக மாறியிருப்பதாக மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு D614D என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா கடந்த வருட இறுதியில் ஆரம்பித்தது என எல்லோராலும் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆரம்பித்தது எங்கே எப்போது என்ற மர்மம் இன்னுமும் நீடித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையிலேயே இது 2012ம் ஆண்டு ஆரம்பித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.73-லட்சத்தைக் தாண்டி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18-கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.46-கோடியைத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here