- Advertisement -
Home Srilanka நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீட்டெடுக்க மூன்று நாட்கள் தேவை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீட்டெடுக்க மூன்று நாட்கள் தேவை

- Advertisement -

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மின் உற்பத்தி மின் நிலையங்களிலும் நேற்று கோளாறு ஏற்பட்டிருந்தது.

பின்னர் இந்த கோளாறுகள் சீரமைக்கப்பட்டபோதிலும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான மின் இணைப்பின் பரிமாற்றத்தை மீட்டெடுக்க குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு மின்சாரம் அனுப்பும் கரவலப்பிட்டி மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, விசையாழிகள் குளிர்ச்சியடையும் வரை மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இதேவளை மின்சக்தி அமைச்சர் டலாஸ் அழகாபெருமா, மின் தடை குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்க அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்தக் குழு இன்று காலை 8:30 மணியளவில் மின்சக்தி அமைச்சில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் குறித்த குழுவுக்கு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவு பிறப்பித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here