Home Srilanka நுரைச்சோலை மின்நிலையத்திலும் கோளாறு:மீண்டும் மின்வெட்டு?

நுரைச்சோலை மின்நிலையத்திலும் கோளாறு:மீண்டும் மின்வெட்டு?

நேற்றுமுதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலும் பாரிய மின்விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்ற அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

கெரவலப்பிட்டிய மின்விநியோக பிரதான நிலையத்தில் நேற்று பகல் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து இரவு 8 மணியளவிலேயே நாடு முழுவதிலும் மின்விநியோகம் சீராகியது.

இந்த நிலையில் நேற்று மாலை நுரைச்சோலை லக்விஜய மின்விநியோக நிலையத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், தற்சமயம் திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -