9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக வாக்கெடுப்பு இன்றி மஹிந்த யாப்பா அபேவர்தன பொறுப்பேற்றுள்ளார்.
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் சார்பாக சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாபா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஏகமனதாக புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்திருந்தார்.