ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9வது நாடாளுமன்றம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிரியெல்ல எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கிரியெல்ல அவை தலைவராக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.