Home Srilanka தமிழர் தேசம் எனக்கூறிய விக்கிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட சஜித் அணி

தமிழர் தேசம் எனக்கூறிய விக்கிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட சஜித் அணி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனினால் நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழழை கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று நடந்தது.

இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் எழுந்து விக்னேஸ்வரனின் கருத்துக்கெதிராக எதிர்ப்பு வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் இந்த கருத்தினை நாடாளுமன்ற ஹான்சாட் பதிவிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

நாட்டிற்குள் இன்னுமொரு இராஜியத்தைக் கட்டியெழுப்ப மாட்டோம் என்று நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்திலேயே விக்னேஸ்வரன் இப்படிக்கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இதுகுறித்து ஆராய்வதாகக் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -