- Advertisement -
Home Srilanka நாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதி வெளியானது

நாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதி வெளியானது

- Advertisement -

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானது.

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு நாளைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் வரையான காலப்பகுதிக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புப் பற்றிய நிலையியற் கட்டளை இலக்கம்27ற்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தெரியப்படுத்தவும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை நிலையியற் கட்டளை 27 (2)இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நாளை நாடாளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்குஇ அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு

மஸ்கெலியா, பிரவுன்லோ தோயிலைத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய புலியின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டதாக நல்லதன்னி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்...

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை பொலிஸாரிடம் சிபிசிஐடியினர் விசாரணை!

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை போலீசாரை நீதிமன்றக் காவலில் எடுத்த சிபிசிஐடியினர் தனுஷ்கோடியில் வைத்து விசாரணை நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் கடந்த செப்டெம்பர் 5ம் திகதி பைபர் படகு...

பிள்ளையான் ஏற்றுக் கொண்ட முக்கிய பதவி!

மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றார்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here