- Advertisement -
Home Srilanka வட மாகாணத்தில் உணவுகளின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு

வட மாகாணத்தில் உணவுகளின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு

- Advertisement -

வட மாகாணத்தில் குறிப்பிட்ட உணவுகளுக்கு சடுதியான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவகங்களில் உளுந்து வடை மற்றும் தோசை சாதாரண மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உளுந்து ஒரு கிலோகிராம் ஆயிரம் ரூபாவுக்கும் தேங்கா எண்ணை ஒரு லீற்றர் 600 ரூபாவுக்கும் செய்யப்படுவதால் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளன.

இந்த விலை அதிகரிப்பிற்கு முன்னர் உளுந்து வடை ஒன்று 20 ரூபாவுக்கும் தோசை ஒன்று 15 ரூபாவுக்கும் விற்பனையாகியுள்ளது. எனினும் தற்போது உளுந்து வடை ஒன்று 50 ரூபாவுக்கும் தோசை ஒன்று 40 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வடை மற்றும் தோசை ஆகிய இரண்டிற்கும் உளுந்து தேவைப்படுவதனால் வடையின் அளவும் சிறியதாக்கி அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் அன்றாட கூலித் தொழில் செய்பவர்கள் உணவிற்காக வடை மற்றும் தோசை கொள்வனவு செய்கின்றனர். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வட மாகாண விவசாயிகள் உளுந்து பயிர் செய்கையை நிறுத்தியுள்ளமை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இருந்து உளுந்து இறக்குமதி செய்யப்படாமையினாலும் இந்த அளவு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here