இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்து வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்வையும் பாதித்து விடுவதனால் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கென புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரவை அனுமதி பெற்று தனியான நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருடத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பத்தாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.