- Advertisement -
Home Srilanka தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலின் சறுக்கலே தவிர அது முற்றுப்புள்ளியல்ல..

தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலின் சறுக்கலே தவிர அது முற்றுப்புள்ளியல்ல..

- Advertisement -

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எமக்கான மக்கள் ஆதரவுத்தளம் தடம்புரண்டதாக அல்லது சில சில்லறைகள் எமது மக்கள் ஆதரவை தடம்புரள வைத்ததாகக் கருத வேண்டாம். இத் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய அரசியலின் சறுக்கலே தவிர அது முற்றுப்புள்ளியல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எமக்கான மக்கள் ஆதரவு தளம் தடம்புரண்டதாக அல்லது சில சில்லறைகள் எமது மக்கள் ஆதரவை தடம்புரள வைத்ததாக மார்தட்டிக் கூறுவதை ஏற்க முடியாது ஒன்று தமிழ் தேசிய அரசியலை தமிழ் தேசிய மக்கள் உணர்வுகளை தெளிவாக புரிந்து கொண்டவன் என்ற வகையில்

இத் தேர்தல் முடிவுகள் எமக்கு ஏற்பட்ட ஒரு சறுக்கல் அவ்வளவுதான் அது தமிழ் தேசிய அரசியலின் முற்றுப்புள்ளியல்ல. இதை முதலில் நாம் அறிய வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு உங்களுக்கு பெரும் வெற்றி இதில் எந்த வித ஐயமும் இல்லை ஆனால் இந்த வெற்றிக்கான காரண காரியங்களை நான் ஆராய முனையவில்லை.

நீங்கள்பெற்ற இந்த பெரு வெற்றியை நம்நாட்டில் ஐக்கியம் ஒருமைப்பாடு இனமத மொழி ரீதியான சமத்துவம் என்பவற்றை கட்டியெழுப்ப பயன்படுத்துங்கள் படைகளின் மனோபாவம் படைத்தளபதிகளின் மனோபாவம் யுத்தத்தின் தர்மம் யுத்தத்தின் அதர்மம் அத்தனையும் புரிந்தவன் நான்.

ஏன் என்றால் நானும் முன்னாள் போராளி களமாடியவன் இதனால் தான் கூறுகின்றேன் யுத்தகால சமன்பாடு சமாதானகாலத்திற்கு பொருந்தாது. யுத்த வெற்றி இந்த தேர்தல் வெற்றி இவை மூலம் நீங்கள் கொள்ளும் மமதை சில வேளை விபரீதத்தை ஏற்படுத்தலாம்.

அந்த விபரீதம் எதிர்காலத்தில் உங்களுக்கும் ஏற்படக்கூடாது. ஆணை பெண்ணாக்க பெண்ணை ஆணாக்க மட்டுமே முடியாத அத்தனை அதிகாரங்களையும் கொண்டு தனக்கேற்ற வகையில்

அரசியலமைப்பை உருவாக்க தனது நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பாண்மை பெற்ற ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை இக்கனம் நினைவு கூர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோருவது பிரிக்க முடியாத பிளவு படாத ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றாக சமத்துவமாக வாழும் உரிமையினையே எமது கோரிக்கை.

இதனை பிழையாக பொருள்கோடல் செய்யாதீர்கள் தென்னிலங்கை மக்களை எமது கோரிக்கை தொடர்பாக பிழையாக தவறாக வழிநடத்தாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது நாட்டை கட்டியெழுப்புவோம் என்று தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here