Home Srilanka போர்க்குற்றங்கள் நிகழவே இல்லை பொய்யுரைக்கிறார் கஜேந்திரகுமார் - நாடாளுமன்றில் சரத் வீரசேகர மறுப்பு

போர்க்குற்றங்கள் நிகழவே இல்லை பொய்யுரைக்கிறார் கஜேந்திரகுமார் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர மறுப்பு

இலங்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வாதிட்டார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது குறுக்கிட்ட சரத் வீரசேகர, இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தன என்று அவர் சபையில் பொய் கூறுகின்றார் என்று கூறினார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ அரசு இறையாண்மையைக் காட்டி போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க முடியாது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்போது இடைமறித்த அமைச்சர் சரத் வீரசேகர, “இந்த நாட்டில் எந்தவித போர் குற்றங்களும் இடம்பெறவில்லை. கஜேந்திரகுமார் இந்த சபையை தவறாக வழிநடத்துகின்றார்” என்று கூறினார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -